தாய்லாந்தின் எராவான் ஆலய குண்டு வைப்பு - இருவருக்கு மரண தண்டனை
13 ஆனி 2026 சனி 08:53 | பார்வைகள் : 197
தாய்லாந்தின் பாங்காக் நகரில் சீனாவிலிருந்து சுற்றுலா வருவோர் மத்தியில் மிகவும் பிரபலமான எராவான் வழிபாட்டுத் தலத்திற்கு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நான்கு தலைகளைக் கொண்ட பிரம்மா, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தெய்வமாக வழிபடப்படுகிறார்.
எரவான் என்பது இந்திரனின் வாகனமான மூன்று தலை வெள்ளை யானையைக் குறிக்கும்.
பிரம்மனின் உருவமும் இந்த யானையும் இணைந்து தாய்லாந்து கலாச்சாரத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.
இங்கு கடந்த 2015 ஆகஸ்ட் 17-ம் தேதி சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர்.
120-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு நடந்த சிறிது நேரத்தில் சீனாவின் உய்குர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த யுசுபு மியரைலி, பிலால் முகமது ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
வீடியோ பதிவுகள், கைரேகைகள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் இவர்கள் இந்த குண்டு வெடிப்புடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தெற்கு பாங்காக் குற்றவியல் நீதிமன்றம் இருவருக்கும் நேற்று மரண தண்டனை விதித்தது.
இவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும் தாங்கள் குற்ற மற்றவர்கள் என்பதை நிரூபிக்க அவர்களால் போதுமான ஆதாரங்களை வழங்க முடியவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக அதிகாரிகள் 17 சந்தேக நபர்களை அடையாளம் கண்டனர்.
ஆனால் 3 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். ஆதாரங்கள் இல்லாததால், தாய்லாந்து பெண் ஒருவர் மீதான குற்றச்சாட்டுகள் 2024-ல் கைவிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan