Gare du Nord மற்றும் Gare de l'Est தொடருந்து நிலையங்களை இணைக்கும் பாதசாரி சுரங்கப்பாதை விரைவில்...
12 ஆனி 2026 வெள்ளி 21:49 | பார்வைகள் : 307
Gare de l'Est மற்றும் Gare du Nord தொடருந்து நிலையங்களை இணைக்கும் பாதசாரி சுரங்கப்பாதை தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, Gare de l'Est நிலையத்திலிருந்து Gare du Nord நிலையத்திற்கோ அல்லது அதற்கு மாறாகவோ செல்ல வேண்டுமெனில், பயணிகள் வெளியே வந்து மிகவும் பரபரப்பான Rue La Fayette சாலையைக் கடக்க வேண்டியிருந்தது. இன்னும் சில மாதங்களில், இது கடந்தகால நினைவாக மட்டுமே இருக்கும். இரு நிலையங்களையும் இணைக்கும் இந்த பாதசாரி சுரங்கப்பாதை தற்போது தோண்டி முடிக்கப்பட்டுள்ளது.
இது செயல்பாட்டுக்கு வந்த பிறகு, பயணிகள் நிலைய மாற்றத்தின் போது சுமார் 7 நிமிடங்கள் வரை நேரத்தைச் சேமிக்க முடியும். பரிஸ் நகரின் மையப்பகுதியில் நிலத்தடி சுரங்கத்தை அமைப்பது எளிதான காரியம் அல்ல. அதனால் இது ஒரு உண்மையான தொழில்நுட்ப சாதனையாகக் கருதப்படுகிறது.
Rue La Fayette பகுதியில் ஒரு பெரிய அகழ்வுக் கிணறு தோண்டப்பட்டது. இதன் மூலம் 7,000 டன் அளவிலான தோண்டப்பட்ட மண்ணும் கற்களும் அகற்றப்பட்டன. மேலும், சுரங்கத்தின் கட்டமைப்பை உருவாக்க தேவையான கான்கிரீட் மற்றும் இரும்புக் கம்பிகளும் ஆழத்தில் செலுத்தப்பட்டன.
இறுதி உள்புற மேற்பூச்சு பணிகள் முடிந்த பிறகு, இந்த நிலத்தடி பாதை 2027 மார்ச் மாதத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது Charles de Gaulle Express சேவையின் தொடக்கத்துடன் ஒத்துப்போகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan