தி.மு.க., - த.வெ.க., தான் பா.ஜ.,வின் கொள்கை எதிரிகள்: அமித்ஷா
13 ஆனி 2026 சனி 10:41 | பார்வைகள் : 166
உங்களின் கொள்கை எதிரிகள் தி.மு.க.,வும், தமிழக வெற்றிக் கழகமும் தான். உங்கள் பணி, மக்களை சந்தித்து, மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறுவது மட்டுமே,'' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.,வின் மாநில மையக்குழு கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டில்லியில் நடந்தது. இதில் பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ், தமிழக பா.ஜ., தலைவர் தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் முருகன், மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, வானதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:
நாட்டின் பிரதமராக அதிக நாட்கள் பணியாற்றிய சாதனையை, நரேந்திர மோடி படைத்துள்ளார். அவரின் தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அவற்றை, தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் சேர்க்க வேண்டும். இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தலைவரை அனுப்பி, பொதுக்கூட்டங்கள், செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த வேண்டும்.
அண்ணாமலை விலகலால், தமிழக பா.ஜ.,வுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. இதைக் கட்சி தொண்டர்கள் உணரும் வகையில், நிர்வாகிகள் கட்சி வளர்ச்சி பணியில் முழு கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு கொள்கை ரீதியான எதிரி தி.மு.க.,வும், த.வெ.க., தலைவர் விஜயும் தான். எனவே, தி.மு.க., ஆட்சியில் நடந்த ஊழல்கள், த.வெ.க., ஆட்சியில் நடக்கும் தவறுகளை பற்றி மக்களிடம் பேச வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எதை பற்றியும் நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை. அனைத்தையும் நான் பார்த்து கொள்கிறேன். உங்களின் வேலை, ஊர் ஊராக சென்று, தொண்டர்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்துவது தான்; மக்களை சந்தித்து, மத்திய அரசின் சாதனைகளை கூற வேண்டியது தான்.இவ்வாறு அமித்ஷா பேசியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan