Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சர் ஜெய்சங்கர்

13 ஆனி 2026 சனி 09:35 | பார்வைகள் : 137


ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்யும் ஆயுதங்கள் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

பின்லாந்து சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அங்கு நடந்த கலந்துரையாடலில் பேசியதாவது: ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட பிறகு உலகளாவிய எண்ணெய் சந்தைகளை நிலைப்படுத்த உதவும் வகையில், 2022ல் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குமாறு அமெரிக்கா இந்தியாவை ஊக்குவித்தது.

விலை மற்றும் தரத்தின் அடிப்படையில் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குகிறோம். ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கியதற்காக முதலில் எங்கள் மீது வரிகளை விதித்த பிறகு, அமெரிக்கா மீண்டும் தனது தடைகளை நீக்கியுள்ளது. நாட்டின் தேசிய நலனை அடிப்படையாகக் கொண்ட தனது எரிசக்தித் தேவைகளுக்கே இந்தியா முன்னுரிமை அளிக்கும்.

ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்யும் ஆயுதங்கள், இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன. இப்போது மட்டுமல்ல, பல ஆண்டுகளாகவே இது நடந்து வருகிறது. நாங்கள் இந்தியர்கள் ஐரோப்பாவிற்கு ஆபத்தை விளைவிக்கும் எதையும் ஒருபோதும் செய்ததில்லை. இந்திய ஆயுதங்களைக் கொண்டு எந்த ஐரோப்பிய நாடும் தாக்கப்படவில்லை. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.