ஷங்கர் எடுத்த அதிரடி முடிவு
12 ஆனி 2026 வெள்ளி 16:22 | பார்வைகள் : 221
பிரமாண்ட இயக்குனர் என பெயர் எடுத்த ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு படுதோல்வி அடைந்தன. இதனால் அவரது அடுத்தப்பட அறிவிப்பில் சுணக்கம் நிலவுகிறது. அதுபற்றி எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
சமீபகாலமாக தனது நீண்டநாள் ஆசையான "வேள்பாரி" நாவலை தழுவி படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால், தொடர் தோல்வியினால் ஷங்கரை நம்பி பெரிய முதலீடு செய்ய பல தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுவதால் வேள்பாரி தற்போது அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
இந்த நிலையில் வேள்பாரி உருவாக்குவதற்கு முன்பு குறுகிய கால கட்டத்தில் சுமாராக 70 நாட்களுக்குள் ஒரு படத்தை உருவாக்கி வெளியிடலாம் என்கிற எண்ணத்தில் உள்ளதாக தகவல் பரவி வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan