Paristamil Navigation Paristamil advert login

பால்பாண்டி பாரதிராஜா ஆனது எப்படி?.

பால்பாண்டி பாரதிராஜா ஆனது எப்படி?.

12 ஆனி 2026 வெள்ளி 15:57 | பார்வைகள் : 205


16 வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களுக்கு முன்னோடியாக இருந்தவர். புதிய பாதை அமைத்துக் கொடுத்தவர் சாதாரணமான ஒருவரும் திரையுலகில் இயக்குனராக முடியும் என்கிற நம்பிக்கையை உருவாக்கியவர்.

வேதம் புதிது, கடலோரக் கவிதைகள், காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல நல்ல திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர். வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை எடுத்து வந்த பாரதிராஜா நேற்று அதிகாலை 2 மணியளவில் சென்னை நீலங்கரையில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவரின் விருப்பப்படியே அவரின் உடல் இன்று தேனியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது..

தனக்கு பாரதிராஜா என பெயர் வந்தது பற்றி சில வருடங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘என் பேரு பால்பாண்டி.. சர்டிபிகேட்ல சின்னசாமி. பாரதி என் தங்கச்சி பெயர்.. ஜெயராஜ் என் தம்பி.. இரண்டையும் சேர்த்து பாரதிராஜா என்று வைத்துக்கொண்டேன்.. இன்னைக்கும் கண்ணாடியில் பார்க்கும்போது வியப்பா இருக்கும்.. 300 ரூபாயோட சென்னை வந்த நான் இப்ப இவ்வளவு தூரம் வந்திருக்கேன்னா ஏதோ சக்தி நமக்குள் இருக்கு.. முதல்ல உங்களை நேசிங்க சார்.. இன்னொரு ஜென்மம் கிடைக்காது’ என சொல்லியிருக்கிறேன்.