Paristamil Navigation Paristamil advert login

முதுமையிலும் இளமையாக வாழலாம்

முதுமையிலும் இளமையாக வாழலாம்

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 14041


 கோடைகாலத்தில் மாம்பழம் மிகவும் விலைமலிவாக கிடைக்கும். இந்த பழத்தில் கரோட்டினாய்டு பீட்டாகரோட்டீன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட்  அதிகம் உள்ளது. இவை சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும். எனவே முடிந்த அளவில் இதனை வாங்கி சாப்பிடுவது, இளமை  தோற்றத்தை அதிகரிக்கும். கீரையில் லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே இந்த கீரையை  அதிகம் சாப்பிட்டால், இளமையுடன் இருக்கலாம். ஒரு கப் பசலைக் கீரையில், சருமத்திற்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும்  ஆன்டிஆக்ஸிடன்ட்களான  லைகோபைன் மற்றும் இதர வைட்டமின்களும் நிறைந்துள்ளன.

 
பச்சை இலைக் காய்கறிகளில் ப்ராக்கோலியில் அதிக அளவில் லைகோபைன் உள்ளது. எனவே சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, நன்கு  இளமையாகக் காணப்பட, இந்த காய்கறியை உணவில் சேர்ப்பது நல்லது. முட்டையிலும், லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும்  ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு மட்டுமின்றி, கண்களுக்கும் சிறந்தது.  குடைமிளகாயில்  சருமத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும், வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.
 
அதிலும் இந்த காய்கறியில் நிறைய வண்ணங்கள் உள்ளன. இவை அனைத்திலுமே கரோட்டினாய்டுகள் மற்றும் பீட்டாகரோட்டீன் அதிகம் உள்ளன.  பாலில் கால்சியம், புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின் ஏ மற்றும் கரோட்டீனாய்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த  பாலை, அதிகம் குடித்தால், நிச்சயம் உடல் ஆரோக்கியத்துடன், இளமையோடு இருக்கலாம்.  தக்காளியில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும்  முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்கும் லைகோபைன் அதிகமாக இருக்கிறது. எனவே இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்திற்கு  மாஸ்க் போன்றும் பயன்படுத்தலாம்.
 
சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பது தெரியும். ஆகவே இவற்றை  சாப்பிட்டால், இதில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள  உதவும். நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தில் லைகோபைன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட்டும் அதிகம் உள்ளது. எனவே இவற்றை அதிகம்  சாப்பிட, வெயிலினால் பாதிப்படைந்த சரும செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து, சருமம் அழகாக காணப்படும்.
 
வாரத்துக்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஓர் ஆராய்ச்சி. மாரடைப்பு மட்டுமல்ல,  பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாகக் குறையும். ரத்த ஓட்டம் சீராகும். உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.  மற்றவர்களுடன்  உரையாடியபடியே நடக்கும்போது, மனதிலும், உடலிலும் உற்சாகம் பிறக்கும்.
 
‘அவசியம் தேவை’:
 
அரை வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று என்று இருந்தால், உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். அதிக பருமன் இல்லாத, நல்ல  சுறுசுறுப்புடன் இருக்கும் ஒருவருக்கு, 1,800 முதல் 2,000 கிலோ கலோரி தேவை. உடலில் புரதச்சத்து குறைந்தால், உடலில் சதை பலவீனம்  அடைந்து, உடல் இளைத்தது போல் ஆகிவிடும். உடல் எடையின் அளவைப் பொறுத்து, அதே அளவை கிராமில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  உதாரணத்துக்கு, ஒருவர் 55 கிலோ எடை இருந்தால், தினசரி உணவில் 55 கிராம் புரதச்சத்து தேவை.
 
காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களில் அதிக அளவில் இருக்கிறது. அந்தந்த பருவத்தில் கிடைக்கும், அந்தந்த ஊரில் விளையும் காய்கறி,  பழங்களை எடுத்துக்கொண்டால், போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். பழங்களை, உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து  எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
எப்படி சாப்பிட வேண்டும்?
 
காலை ஆறு மணிக்கு எழுந்து உடற்பயிற்சியை முடித்துவிடுங்கள். சுகமான காற்று முகத்தில்படும்போது, புத்துணர்ச்சி கிடைக்கும். பிறகு, அரை மணி  நேரம் கழித்து பால், காபி, டீ என ஏதாவது ஒன்றைக் குடிக்கலாம். 8 மணிக்கு 3 இட்லி, தோசை, இடியாப்பம் என எளிதில் ஜீரணமாகக்கூடிய  உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். மதியம் 1 மணிக்கும், இரவில் 8 மணிக்கும் சாப்பிட வேண்டும். கண்டிப்பாக 10 மணிக்கு மேல் தூங்கிவிட வேண்டும்.  இதுபோன்று கடைப்பிடித்தால் கண்டிப்பாக முதுமையிலும் இளமையாக வாழ முடியும்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்