சருமத்தை பொலிவாக்க கடைபிடிக்க வேண்டியவை

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 14038
ஜூஸ் அதிகம் குடிக்கவும். இதனால் சருமத்தின் பொலிவு அதிகரிக்கும். அதற்கு ஜூஸ்களை அதிகம் பருகி, காபி, மது, சர்க்கரை, உப்பு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தின் மீது தடவுங்கள்.
இது முகத்தில் பருக்களை உண்டாக்கும் எண்ணெய் பசையை நீக்குகிறது. நல்ல தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். இது போல வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்து வாருங்கள். புதினா புதினா இலைச் சாற்றினை அல்லது புதினா எண்ணெயை முகத்தில் தடவிக் கொண்டு, 10 நிமிடங்கள் காத்திருக்கவும்.
அதன் பிறகு சாதாரண தண்ணீரைக் கொண்டு முகத்தைக் கழுவவும். சர்க்கரையைக் குறைத்துக் கொள்ளுங்கள். காய்கறிகளையும், பழங்களையும் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் சருமம் மாசு மருவின்றி பொலிவுடன் திகழும். மேலும் உடலில் எப்போதும் நீர்ச்சத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
ஏனெனில் உடலிலுள்ள நச்சுப்பொருள்களை தண்ணீர் சுத்தம் செய்துவிடும். உடற்பயிற்சி தவறாமல் உடற்பயிற்சி செய்து வந்தால், இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்.
இது பருக்களுக்குக் காரணமான வீக்கத்தையும் குறைக்கும் வைட்டமின்கள் உணவில் போதுமான மல்டி வைட்டமின்கள் சேர்க்கப்படுகின்றனவா என்று பார்த்துக் கொள்ளுங்கள். வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளதா என்றும் பாருங்கள்.
சருமம் எப்போதும் புத்துணர்வுடன் இளமையாகத் திகழவும், சருமத்திலுள்ள சுருக்கங்கள் நீங்கவும், சருமத்தில் கரும்புள்ளிகள் நீங்கவும், பருக்கள் நீங்கவும், இது மிகவும் முக்கியம்.
மேலும் உணவு ஆலோசகரிடம், மல்டி வைட்டமின்களை அளிக்கவல்ல உணவு வகைகளைக் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அவற்றை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1