சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம்; 6 மாதம் இலக்கு நிர்ணயித்தார் முதல்வர் விஜய்
2 ஆனி 2026 செவ்வாய் 07:35 | பார்வைகள் : 966
நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆறு மாதங்களை இலக்காக வைத்து பணியாற்ற, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு, கடந்த ஆட்சியில் தனி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். த.வெ.க., ஆட்சியில் அத்துறையை முதல்வர் விஜய் நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இது குறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நகர்ப்புறங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதை, முக்கிய நோக்கமாக வைத்து, அத்துறையை முதல்வர் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
சமீபத்தில், ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர், ஆறு மாதங்களில், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், சுகாதாரத்தை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தினசரி காலையில், கமிஷனர் முதல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரை, பல்வேறு இடங்களில் ஆய்வுக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது குப்பை, கட்டட கழிவு, போஸ்டர் ஆகியவை இருந்தால், அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், சாலையோரம், சென்டர் மீடியனில் பசுமை பரப்பை அதிகரிக்க, நடவடிக்கை எடுப்பது முக்கியம். வீடுகளிலேயே குப்பையை தரம் பிரித்து பெற்று, ஒரே இடத்தில் கொட்டாமல், மறு சுழற்சி மற்றும் அறிவியல் ரீதியாக அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இப்பணிகளை முறையாக செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் விஜயும் பல இடங்களில், நேரடி ஆய்வுக்கு செல்வார் என்பதால், சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் அளிக்க, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் நிர்வாகத்திற்கு, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire