Paristamil Navigation Paristamil advert login

2வது முறையாக IPL கோப்பை வென்ற RCB - அதிரடி காட்டிய விராட் கோலி

2வது முறையாக IPL கோப்பை வென்ற RCB - அதிரடி காட்டிய விராட் கோலி

1 ஆனி 2026 திங்கள் 11:39 | பார்வைகள் : 173


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அசத்தியுள்ளது.

2026 ஆம் ஆண்டின் ஐபிஎல் இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் வைத்து இன்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆரம்பம் முதலே அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் 10 ஓட்டங்களுக்கும், சாய் சுதர்சன் 12 ஓட்டங்களும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய பட்லர்(19), சிந்து(20) ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர்.

வாஷிங்டன் சுந்தர் மட்டும் போராடி 37 பந்துகளில் 50 ஓட்டங்கள் குவித்தார்.

இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் குவித்தது.

கோப்பைக்கான வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களான விராட் கோலி மற்றும் வெங்கடேஷ் ஐயர் அதிரடியான தொடக்கம் கொடுத்தனர்.

வெங்கடேஷ் ஐயர் 16 பந்துகளில் 32 ஓட்டங்கள் குவித்து அவுட்டானர். போட்டியின் கடைசி வரை திறமையான விளையாடிய விராட் கோலி 42 பந்துகளில் 75 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

மேலும் தொடர்ந்து இரண்டாவது முறை ஐபிஎல் கோப்பை வென்ற 3 வது அணி என்ற பெருமையையும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பெற்றுள்ளது.