இலங்கையில் அதிர்ச்சி - தன்சல் வரிசையில் நின்றவர்கள் மீது கெப் மோதி விபத்து - 6 பேர் பலி
1 ஆனி 2026 திங்கள் 11:26 | பார்வைகள் : 142
மீகொடை பகுதியில் தன்சல் ஒன்றுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மேலும் 7 பேர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் குழந்தை ஒன்றும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் ஒன்றே, மீகொட பகுதியில் வழங்கப்பட்ட தன்சலுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது.
சம்பவத்தில் மூன்று ஆண்களும், மூன்று பெண்களுமே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கெப் ரக வாகனத்தின் சாரதி தப்பிச் சென்ற நிலையில் கொடகம சந்தியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், குறித்த கெப் ரக வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கெப் ரக வாகனத்தை செலுத்திய சாரதி மது போதையில் இருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மீகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan