கட்சி கூட்டத்தை புறக்கணித்த 60 திரிணமுல் எம்எல்ஏக்கள்; மம்தா
1 ஆனி 2026 திங்கள் 10:28 | பார்வைகள் : 196
திரிணமுல் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தை 60 எம்எல்ஏக்கள் புறக்கணித்திருப்பது அக்கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பதை அம்பலமாக்கியுள்ளது. எம்எல்ஏக்களின் புறக்கணிப்பால் கட்சி கூட்டத்தை மம்தா பானர்ஜி ரத்து செய்தார்.
அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. அதுமுதல் அக்கட்சிக்கு நாள்தோறும் ஏதேனும் சிக்கல் எழுந்து வருகிறது. 100க்கும் மேற்பட்ட திரிணமுல் கவுன்சிலர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.மேலும், ஆட்சியைப் பிடித்த பாஜ கட்சியின் கூட்டத்தில் திரிணமுல் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். அதேபோல, திரிணமுல் காங்கிரஸ் விரைவில் அழிந்து விடும் என்று சொந்த கட்சி நிர்வாகிகளே வெளிப்படையாக கூறி வந்தனர்.
இந்த நிலையில், 80 எம்எல்ஏக்களை திரிணமுல் காங்கிரஸ் கொண்டுள்ள நிலையில், மம்தா பானர்ஜியின் இல்லத்தில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்த திரிணமுல் சட்டசபைத் தலைவர் சோவன்தேப் சட்டோபாத்யாய ஏற்பாடு செய்திருந்தார்.ஆனால், 20 எம்எல்ஏக்கள் மட்டுமே வந்திருந்ததால் மம்தா பானர்ஜி அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், அங்கு வந்திருந்தவர்களுடன் மம்தா பானர்ஜி முறைசாரா ஆலோசனைகளை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரிணமுல் எம்பிக்கள் அபிஷேக் பானர்ஜி,கல்யாண் பானர்ஜி ஆகியோர் தாக்கப்பட்டதே, எம்எல்ஏக்கள் வராததற்குக் காரணம் என கட்சித் தலைமை விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், 'எங்கள் தலைவர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, எம்எல்ஏக்கள் உள்ளூர் அளவில் போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட தொண்டர்களுக்கு உதவும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளதால், கூட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்,' என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan