முதல்வர் விஜய் இன்று திருச்சி பயணம்: ட்ரோன்கள் பறக்க தடை
1 ஆனி 2026 திங்கள் 05:00 | பார்வைகள் : 179
திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க, முதல்வர் விஜய் இன்று திருச்சி செல்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தலில், 233 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட்டது. அதில், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் அக்கட்சியின் தலைவர் விஜய் போட்டியிட்டார்.
இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் வந்த பின், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ., பதவியை, விஜய் ராஜினாமா செய்தார். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க, முதல்வர் விஜய் இன்று நேரில் செல்ல உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து, தனி விமானத்தில் திருச்சி செல்லும் முதல்வர் விஜய், சத்திரம் பஸ் நிலையம் அருகே, செயின்ட் ஜோசப் கல்லுாரி வளாகத்தில், மாலை 4:15 மணிக்கு நடக்கும், நன்றி தெரிவிப்பு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இக்கூட்டத்தில், 'கியூ ஆர்' குறியீட்டுடன் கூடிய, நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ள 5,000 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். மற்றவர்கள் கூட்டத்திற்கு வர வேண்டாம் என, த.வெ.க., தலைமை அறிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரத்திற்காக திருச்சி சென்றபோது, புனித அந்தோணியார் சர்ச்சில், முட்டிபோட்டு நடந்து சென்று, சில வேண்டுதல்களை விஜய் வைத்திருந்தார். அவை நிறைவேறியதால், நேர்த்திக்கடன் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர உள்ளதால், எம்.எல்.ஏ.,வாக இருக்கும் பெரம்பூர் தொகுதியை விட்டுவிட்டு, திருச்சிக்கு முதல்வர் விஜய் முதலில் நேரில் செல்கிறார் என, த.வெ.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு காரணம் கருதி, இன்று திருச்சி மாநகரில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்துள்ள கலெக்டர் பிரதீக் தயாள், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan