Paristamil Navigation Paristamil advert login

"அதிக தூரம் பயணிக்கும்" தொழிலாளர்களுக்கு 10 நாட்களுக்குள் வங்கி பரிமாற்றம் மூலம் நிதி உதவி!!

"அதிக தூரம் பயணிக்கும்" தொழிலாளர்களுக்கு 10 நாட்களுக்குள் வங்கி பரிமாற்றம் மூலம் நிதி உதவி!!

31 வைகாசி 2026 ஞாயிறு 17:48 | பார்வைகள் : 213


எரிபொருள் செலவினால் அதிகமாக பாதிக்கப்படும் “அதிக தூரம் பயணிக்கும்” தொழிலாளர்களுக்காக அரசாங்கம் வழங்கும் உதவித்தொகைக்கு சில நாட்களிலேயே 4 இலட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பொருளாதார அமைச்சர் Roland Lescure தெரிவித்துள்ளார். அவர் மே மாதம் 31ம் திகதி ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த தகவலை வெளியிட்டார்.

உதவித்தொகைக்குத் தகுதியுடையவர்கள் விண்ணப்பித்த பின்னர் 10 நாட்களுக்குள் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக தொகை வரவு வைக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். விண்ணப்பதாரர்கள் மேலதிக நடவடிக்கை எதையும் மேற்கொள்ளத் தேவையில்லை என்றும், வருமான வரித்துறையிடம் ஏற்கனவே அவர்களது வங்கிக் கணக்கு விவரங்கள் இருப்பதால் பணம் தானாகவே பரிமாறப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

இந்த உதவிக்கான விண்ணப்பப் பதிவு மே 27 ஆம் திகதி வருமான வரித்துறையின் இணையதளத்தில் ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக பிரதமர் Sébastien Lecornu , குறைந்த வருமானம் கொண்ட அதிக தூரம் பயணிக்கும் தொழிலாளர்களுக்கான இந்த திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்திருந்தார். இதுவரை 50 யூரோவாக வழங்கப்பட்ட உதவித்தொகை தற்போது இரட்டிப்பாக்கப்பட்டு 100 யூரோவாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், ஜூன் மாதம் முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கும் இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.