முதல்வராக சிவகுமார் ஜூன் 3ல் பதவியேற்பு
31 வைகாசி 2026 ஞாயிறு 10:24 | பார்வைகள் : 1045
கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா, காங்., மேலிட உத்தரவுப்படி, கடந்த 28ம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்தார். சட்டசபை காங்., புதிய தலைவரை தேர்வு செய்ய, நேற்று மாலை, 4:00 மணிக்கு பெங்களூரு விதான் சவுதாவில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது.
இதில், காங்., பொதுச்செயலர் வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்., புதிய சட்டசபை குழு தலைவராக சிவகுமாரின் பெயரை சித்தராமையா முன்மொழிந்தார். அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் ஆதரவளிக்க, சட்டசபை காங்., தலைவராக சிவகுமார் ஒருமனதாக தேர்வு செய்ப்பட்டார்.
இதையடுத்து, லோக் பவனுக்கு சென்று கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்த சிவகுமார், சட்டசபை காங்., தலைவராக தேர்வு செய்ததற்கான கடிதத்தை வழங்கி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதன்படி, ஜூன் 3ல் கர்நாடகாவின் புதிய முதல்வராக சிவகுமார் பதவியேற்கிறார். அன்றே புதிய அமைச்சரவையும் பதவியேற்கிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire