இந்திய ராணுவத்துக்கு அமெரிக்க ராணுவ அமைச்சர் ஹெக்செத் புகழாரம் !
31 வைகாசி 2026 ஞாயிறு 08:13 | பார்வைகள் : 144
இந்தோ- - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும், அதிகார சமநிலையையும் பராமரிக்க இந்தியாவின் ராணுவம் மிக முக்கிய துாணாக விளங்குகிறது,'' என, அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் புகழாரம் சூட்டினார். தென்கிழக்காசிய நாடான சிங்கப்பூரில், ஆண்டுதோறும், 'ஷாங்ரி- - லா' என்ற பெயரில் சர்வதேச ராணுவ மாநாடு நடக்கிறது. இந்த ஆண்டுக்கான மாநாடு நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், இன்று நிறைவடைகிறது.
வியட்நாம் அதிபர் தோ லாம் மாநாட்டை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் நடந்த முதல் முக்கிய அமர்வில், அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத், இந்தோ- - பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவம் குறித்தும், சீனாவின் ஆதிக்கம் குறித்தும் பேசினார்.
இந்திய பெருங்கடலும், பசிபிக் பெருங்கடலும் இணையும் பிரமாண்டமான கடல் பகுதி தான் இந்தோ- - பசிபிக் பிராந்தியம். இதில் இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் அமெரிக்கா அடங்கியுள்ளன.
இந்த பிராந்தியம் இன்றைய உலக அரசியலிலும், பொருளாதாரத்திலும் மிக முக்கியமான ஒரு புவிசார் பகுதியாக உள்ளது. உலக மக்கள் தொகையில், 60 சதவீதம் பேர் இந்த பிராந்தியத்தில் தான் வசிக்கின்றனர்.
உலக சரக்கு கப்பல் வர்த்தகத்தில் மூன்றில் இரண்டு பங்கு இந்த வழியே தான் நடக்கிறது. இங்குள்ள முக்கிய பிரச்னை சீனாவின் அசுரத்தனமான ராணுவ விரிவாக்கமும், ஆதிக்கப் போக்கும் தான்.
தென் சீனக் கடல் பகுதி முழுதும் தனக்கே சொந்தம் என, சீனா உரிமை கொண்டாடுகிறது. அங்குள்ள பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜப்பான் போன்ற சிறிய நாடுகளை மிரட்டி வருகிறது.
சர்வதேச விதிகளை மீறி, கடலின் நடுவே செயற்கை தீவுகளை உருவாக்கி, அவற்றை ராணுவ தளங்களாகவும், ஏவுகணை ஏவும் மையங்களாகவும் சீனா மாற்றி வருகிறது.
இதை சமாளிக்க, அந்தமான் நிக்கோபர் தீவுகளில் ராணுவக் கட்டமைப்பை பலப்படுத்துவது, முப்படைகளையும் ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளில் இந்தியா இறங்கியுள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இணைந்து, 'குவாட்' என்ற அமைப்பை உருவாக்கி, கூட்டு ராணுவப் பயிற்சிகளையும் இந்தியா நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்தோ- - பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் பங்கு குறித்து அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் பேசியதாவது:
தெற்காசியாவில் இந்தியா ஒரு முக்கியமான துாணாக உள்ளது. எல்லையை பாதுகாப்பதில் அந்நாட்டின் பங்கு அளப்பரியது. பலம் வாய்ந்த அந்நாடு, தன் சொந்த நலன்களின் அடிப்படையில் செயல்படுகிறது.
அதுவே, இந்த பிராந்தியத்தில் அதிகார சமநிலையை பேண உதவுகிறது. நம் கூட்டு இலக்கை மேலும் முன்னோக்கி எடுத்துச்செல்ல உதவுகிறது. \u003cbr\u003e\u003cbr\u003eராணுவத்தை இந்தியா அதிநவீனமயமாக்கி வருகிறது. அதற்காக வலுவான தொழில் துறை மற்றும் தளவாட கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவுடன் இணைந்து கூட்டு தயாரிப்பில் ஈடுபட நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
இந்தோ - பசிபிக் பிராந்தியத்திலும், அதற்கு அப்பாலும் சீனாவின் வரலாற்றுப்பூர்வமான ராணுவ குவிப்பு மற்றும் அதன் ராணுவ நடவடிக்கைகளின் விரிவாக்கம் ஆகியவை எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
ஆதிக்க சக்தியால் பசிபிக் பிராந்தியம் ஆக்கிரமிக்கப்பட்டால், அது பிராந்தியத்தில் அதிகார சமநிலையை குலைத்து விடும்
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர் கூறுகையில், ''இந்தியா -- அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சு, 99 சதவீதம் நிறைவடைந்து விட்டது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும். ''ஒப்பந்தத்தை நிறைவு செய்ய, அமெரிக்க வர்த்தக அதிகாரிகள் குழு நாளை இந்தியா வர உள்ளனர். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், 1 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 20 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது,'' என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan