செல்லப்பிராணிகளின் ஒலியை மொழிபெயர்க்கும் AI கருவி
30 வைகாசி 2026 சனி 12:53 | பார்வைகள் : 183
AI தொழில்நுட்பம் ஒவ்வொரு துறையிலும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.
தற்போது செல்லப்பிராணிகள் பேசுவதை மனிதர்கள் புரிந்து கொள்ளும் உதவும் அளவிற்கு AI கருவிகள் வந்து விட்டன.
தங்களது வீட்டில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் அவைகள் என்ன பேசுகின்ற என்பதை புரிந்து கொள்ளும் வகையில் சீனாவை சேர்ந்த Meng Xiaoyi என்ற நிறுவனம் AI கழுத்து பட்டை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெட்டிசாட் (PettiChat) என அழைக்கப்படும் இந்த கழுத்து பட்டையானது, அலிபாபா கிளவுடின் (Alibaba Cloud) க்வென் ஏஐ (Qwen AI) மாதிரியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் சேகரிக்கப்பட்ட 15 லட்சத்திற்கும் மேற்பட்ட நிஜ உலக செல்லப்பிராணிகளின் ஒலி மாதிரிகள் மற்றும் 3,200 மணிநேரக் குறிப்புரைக்கப்பட்ட செல்லப்பிராணிகளின் காணொளித் தரவுகளைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதனை உங்கள் செல்லப்பிராணியின் கழுத்தில் மாட்டியிருக்கும் போது, அதன் ஒலிகள், உணர்ச்சிகள் மற்றும் நடத்தையை அதிகத் துல்லியத்துடன் அடையாளம் கண்டு, AI உதவியுடன் எழுத்துக்களாக மாற்றி இந்த AI தொடர்புடைய செல்போன் செயலிக்கு அனுப்பும்.
உதாரணமாக உங்கள் பூனை மேலே பார்த்து மியாவ் என கத்தும் போது அது "நான் விளையாட வேண்டும்" எனக்கூறுவதாக மொழி பெயர்த்து அனுப்பும்.
நாய் குறைக்கும் போது "அது எனக்கு பசிக்கிறது" என கூறுவதாக மொழிபெயர்த்து அனுப்பும். நீங்கள், “சும்மா இரு, அமைதியாக இரு,” என்பது போன்ற வார்த்தைகளை கூறும் போது அந்தப் பட்டை, குரைப்பு அல்லது மியாவ் ஒலிகள் மூலம் அந்தச் செய்தியை செல்லப்பிராணிக்கு தெரிவிக்கும்.
27.2 கிராம் எடை கொண்ட இந்த கழுத்து பட்டையில் GPS கண்காணிப்பு வசதியும் உள்ளதால் உங்கள் செல்லப்பிராணி எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் 1,000 க்கும் மேற்பட்ட “வாக்கிய மொழிபெயர்ப்புகளை” செய்ய முடியும்.
இந்த பட்டை மே 30 ஆம் திகதி விற்பனைக்கு வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வரை 10,000க்கும் அதிகமானோர் இதனை வாங்க முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பட்டைக்கு 799 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.11,000) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் துல்லியத்தன்மை பயன்படுத்தும் போதே தெரியும் சமூகவலைத்தளங்களில் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan