விஜய் மகன் இயக்கிய சிக்மா எப்போ ரிலீஸ்?
29 வைகாசி 2026 வெள்ளி 15:53 | பார்வைகள் : 128
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்கும் படம் 'சிக்மா' (Sigma). இதில் ஹீரோவாக சுந்தீப் கிஷன் நடிக்கிறார். பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. தமன் எஸ். இசையமைக்கிறார். படத்தின் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரமும் வெளியாகியுள்ளது. பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்ய, சஞ்சீவ் இணை இயக்குநராகப் பணியாற்றுகிறார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். பப்ளிசிட்டி டிசைனை ட்யூனி ஜானும், விஎஃப்எக்ஸ் பணிகளை ஹரிஹரசுதனும் கவனிக்கின்றனர்.
ஜேசன் சஞ்சய், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முறையாக டைரக்ஷன் படித்த பிறகுதான் தனது முதல் படத்தை இயக்கி இருக்கிறார். இவர், 2020-ல் டொராண்டோ ஃபிலிம் ஸ்கூலில் ஃபிலிம் புரொடக்ஷன் டிப்ளமோ முடித்தார். அதன்பிறகு, லண்டனில் திரைக்கதை எழுதுவதில் பி.ஏ. பட்டமும் பெற்றார். விஜய்யின் மகன் இயக்கும் முதல் படம் என்பதால், கோலிவுட்டில் இந்தப் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்கு முன்பு, ஜேசனை ஹீரோவாக நடிக்க வைக்கப் பலரும் முயற்சி செய்தனர். இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கூட தன் மகனை ஹீரோவாக்க கதை சொன்னதாக விஜய்யே ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் சிக்மா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி சிக்மா திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 31ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விஜய் மகன் இயக்கியுள்ளதால் இப்படத்திற்கு தளபதி ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தன் மகன் இயக்கிய முதல் படமாக இருந்தாலும் அதற்கு இதுவரை எந்தவித வாழ்த்துக்களையும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகிறார் தளபதி. படத்தின் ரிலீஸின் போதாவது ஏதாவது ட்வீட் போடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சிக்மா திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியில் ரிலீஸ் ஆக உள்ளது.
சிக்மா திரைப்படம் ஜூலையில் ரிலீஸ் ஆகும் நிலையில், அதற்கு முன்னதாகவே ஜூன் மாதம் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். அப்படத்தில் நடிகர் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மமிதா பைஜு, பாபி தியோல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஜன நாயகன் திரைப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கே ரிலீஸ் ஆவதாக இருந்த ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக முடங்கிப்போனது. கடந்த மாதம் இப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக லீக் ஆனது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan