சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் அடையாளம் காணப்பட்டு கடும் நடவடிக்கை ; அமித்ஷா
29 வைகாசி 2026 வெள்ளி 08:03 | பார்வைகள் : 277
நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறிய ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது; எல்லைக் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பை விரைவுபடுத்துவதற்காக, சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசாங்கம் வெறும் 7 நாட்களுக்குள் சுமார் 600 ஹெக்டேர் நிலத்தை எல்லைப் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைத்துள்ளது.
ராஜதந்திர ரீதியாக 'சிக்கன் நெக்' பகுதியில், கண்காணிப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த சுமார் 121 ஹெக்டேர் நிலம் மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தீவிர நடவடிக்கைகளால் சட்டவிரோத ஊடுருவல்காரர்களுக்கு அழுத்தம் ஏற்படத் தொடங்கியுள்ளது. கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் பலர் தாங்களாகவே திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் தடுப்பு மையங்களை உருவாக்குவதன் மூலம் சட்டவிரோத குடியேற்ற வழக்குகளைத் திறம்பட கையாள முடியும். இந்தியா-வங்கதேச எல்லையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வேலி அமைக்கும் பணிகள் விரைவில் மீண்டும் தொடங்கும். இதன் மூலம் ஊடுருவல் வழிகள் அடைக்கப்படும். சட்டவிரோதமாகக் குடியேறிய ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள், இவ்வாறு அவர் கூறினார்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan