எல்லையில் அமைதியை பேணுவதில் முன்னேற்றம்: இந்தியா- சீனா திருப்தி
29 வைகாசி 2026 வெள்ளி 07:00 | பார்வைகள் : 263
எல்லையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இந்தியா, சீன அரசு அதிகாரிகள் திருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்தியா சீனா எல்லை விவகாரத்துக்கான ஒருங்கிணைப்புக்கான பணிக்குழுவின் 35வது கூட்டம் பீஜிங்கில் நேற்று நடந்தது. வெளியுறவுத்துறை இணைச் செயலாளர்( கிழக்கு ஆசியா) சுஜித் கோஷூ தலைமையிலான குழு பங்கேற்றது. சீ ன சார்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை விவகாரத்துக்கான இயக்குநர் ஜெனரல் ஹோ யன்கி தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில்,
எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆராயப்பட்டதாகவும், அங்கு நிலவும் அமைதி மற்றும் நல்லிணக்கம் திருப்தி அளிப்பதாகவும், இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். அங்கு நிலவும் ஸ்திரத்தன்மை காரணமாக இரு தரப்பு உறவு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை மறுவரை, எல்லை நிர்வாகம், எல்லை தாண்டிய ஒத்துழைப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையிலான நதிநீர் விவகாரம் குறித்து நிபுணர்களின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடக்க வேண்டும் என இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது.இந்த சந்திப்புக்கு பிறகு சுஜித் கோஷ், சீன வெளியுறவு இணை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு முக்கியநபர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan