தவெக ஆட்சி 5 ஆண்டு தொடர ஆதரவு; இந்திய கம்யூ., உறுதி
29 வைகாசி 2026 வெள்ளி 06:11 | பார்வைகள் : 1182
த.வெ.க., அரசுக்கு, எவ்வித குடைச்சலும் தராமல், 5 ஆண்டு இடதுசாரிகள் ஆதரவு அளிப்பர்' என இந்திய கம்யூ., மாநில செயலர் வீரபாண்டியன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
ஆளும் தரப்புக்கு ஆதரவாக, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை இழுப்பது ஜனநாயக விரோதம். மக்களும் அதனை ஏற்கமாட்டார்கள். சட்ட விதிகளுக்கு எதிரான அச்செயலை ஏற்க முடியாது. கட்சி மாறி வந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு, இடைத்தேர்தலில் த.வெ.க., வாய்ப்பளித்தால், அந்த சூழலில் எங்கள் நிலைப்பாட்டை முடிவு செய்வோம்.
முதல்வர் விஜய் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். கடந்த தி.மு.க., அரசின் திட்டங்களையும் தொடர வேண்டும், புதிய திட்டங்களையும் கொண்டுவர வேண்டும்.ஆளும் த.வெ.க., அரசுக்கு, இடதுசாரிகள் குடைச்சல் கொடுப்பர்.
தி.மு.க., நெருக்கடியால் விலகுவர் என்பவை தவறான கணிப்பாகும். இந்த ஆட்சி 5 ஆண்டு தொடர ஆதரவளிப்போம். ஒருபோதும், ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையில் இடதுசாரி கட்சிகள் ஈடுபட மாட்டார்கள். இவ்வாறு வீரபாண்டியன் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Annonces
Ajouter
Annuaire