மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் தகராறுகளைத் தீர்க்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
29 வைகாசி 2026 வெள்ளி 05:11 | பார்வைகள் : 303
மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் தகராறுகளைத் தீர்க்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
பிரகதி என்பது இந்திய அரசால் 2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த, பல்நோக்கு நிர்வாகத் தளமாகும். இக்கூட்டத்திற்குப் பிரதமர் தலைமை தாங்கினார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய அரசின் செயலாளர்கள் மற்றும் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் நேரடியாக ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி ஒன்பது மாநிலங்களை உள்ளடக்கிய, ரூ. 30,000 கோடி மதிப்பிலான ரயில்வே, மின்சாரம் மற்றும் சாலைத் துறைகளைச் சார்ந்த ஏழு முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதம் செலவு அதிகரிப்புக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், அத்தியாவசிய வசதிகளை உரிய நேரத்தில் பெறுவதிலிருந்தும் மக்களை அது தடுக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும், மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் தகராறுகளை சரி செய்வதும், உரிய நேரத்தில் அனுமதி வழங்குதல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் தீர்க்குமாறு மாநிலங்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan