Coupe du Monde 2026 : பிரான்ஸ் கால்பந்து அணியை சந்திக்கவுள்ள ஜனாதிபதி மக்ரோன்!!
28 வைகாசி 2026 வியாழன் 14:53 | பார்வைகள் : 284
ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், ஜுன் 7 செவ்வாய்க்கிழமை Clairefontaineஇல் பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் வீரர்களையும் பயிற்சியாளர் குழுவினரையும் சந்திக்க உள்ளார். Kylian Mbappé தலைமையிலான அணியினர் ஜுன் 10 அன்று அமெரிக்காவிற்கு புறப்பட உள்ளனர்.
இது தற்போது ஒரு வழக்கமான மரபாக மாறியுள்ளது. 2018 மற்றும் 2022 ஆண்டுகளில் போலவே, இந்த முறையும் உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன் மக்ரோன் அணியை நேரில் சென்று வாழ்த்தவுள்ளார்.
தனது இரு பதவிக்காலங்களிலும் கால்பந்தில் ஆர்வமுள்ள மக்ரோன், 2018 மற்றும் 2022 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளை நேரில் கண்டுள்ளார். இரு முறைகளிலும் அவர் மைதானத்தில் இருந்தார். குறிப்பாக 2022 கத்தார் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்த பிறகு மனமுடைந்த எம்பாப்பேவை ஆறுதல் கூற அவர் லுசைல் (stade de Lusail) மைதான புல்வெளிக்கே இறங்கினார்.
இந்த முறை உலகக்கோப்பை போட்டி ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan