Paristamil Navigation Paristamil advert login

சோனியா, ராகுல் சந்திப்பு இல்லை; அதிகாரிகளுடன் ஆலோசனை முடித்து சென்னை புறப்பட்டார் விஜய்

சோனியா, ராகுல் சந்திப்பு இல்லை; அதிகாரிகளுடன் ஆலோசனை முடித்து சென்னை புறப்பட்டார் விஜய்

28 வைகாசி 2026 வியாழன் 09:05 | பார்வைகள் : 160


டில்லி பயணத்தை முடித்து கொண்டு சென்று கிளம்பினார் முதல்வர் விஜய்; அவர் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மற்றும் ராகுலுடன் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

டில்லி தமிழ்நாடு இல்லத்தில் இன்று (மே 28) காலை முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சரவை செயலாளர் சோமநாதன் மற்றும் அதிகாரிகள் ராஜேஷ் லக்கானி, பிரியதர்ஷினி, ரோஹினி உள்ளிட்ட மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேகதாது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தியதாக டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று முதல்வர் விஜய் சந்தித்து பேசினார்.

டில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மற்றும் ராகுலை முதல்வர் விஜய் சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டது. முதல்வர் விஜய் அவசரமாக சென்னை திரும்பிவிட்டார்.