Paristamil Navigation Paristamil advert login

கடும் வெப்பம் காரணமாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில தொடருந்து சேவைகள் ரத்து!!

கடும் வெப்பம் காரணமாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில தொடருந்து சேவைகள் ரத்து!!

27 வைகாசி 2026 புதன் 21:44 | பார்வைகள் : 339


மே 28 வியாழக்கிழமை மற்றும் மே 29 வெள்ளிக்கிழமை மிகவும் அதிக வெப்பம் காணப்படும் நேரங்களில் இயக்கப்படும் சில Intercités ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என்று SNCF பல ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

“இந்த நடவடிக்கைகள், அதிக வெப்பநிலையால் ஏற்படக்கூடிய குளிரூட்டி (climatisation) தொடர்பான கோளாறுகளைத் தடுக்கும் நோக்கத்துடன் எடுக்கப்படுகின்றன,” என்று SNCF விளக்கியுள்ளது. 

குறிப்பாக “Corail” வகை பழைய தொடருந்து பெட்டிகள் “தொடர்ச்சியான பராமரிப்பில் இருந்தாலும்”, புதிய தொடருந்துகளைப் போல அதே அளவிலான வலிமை மற்றும் நம்பகத்தன்மை இல்லையென கூறப்பட்டது.

Occitanie பகுதியில், வியாழக்கிழமைக்கு:

  • Paris–Limoges–Toulouse (POLT) பாதையில் 7 தொடருந்துகள் ரத்து செய்யப்படுகின்றன.
  • Bordeaux–Marseille பாதையில் 6 தொடருந்து ரத்து செய்யப்படுகின்றன.

வெள்ளிக்கிழமைக்கு:

  • POLT பாதையில் மேலும் 7 தொடருந்துகள் ரத்து செய்யப்படுகின்றன.
  • Bordeaux–Marseille பாதையில் 5 தொடருந்துகள் ரத்து செய்யப்படுகின்றன.

மேலும், Clermont–Paris பாதையிலும் அடுத்த சில நாட்களில் பல தொடருந்துகள்  இயக்கப்படமாட்டாது. குறிப்பாக இந்த வெள்ளிக்கிழமை இரண்டு இருவழிப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக, சில இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. மேலும், பாதிக்கப்பட்ட பயணிகள் கட்டணமின்றி டிக்கெட் பணத்தைத் திரும்பப் பெறவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ முடியும் என்று SNCF Voyageurs தெரிவித்துள்ளது.