ராகுல் விருப்பம் நிறைவேறிவிட்டது; அமலாக்கத்துறை ரெய்டு பற்றி பினராயி விஜயன் கருத்து
28 வைகாசி 2026 வியாழன் 12:41 | பார்வைகள் : 121
ராகுல் விருப்பம் நிறைவேறிவிட்டதாக கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் என்ற நிறுவனம் உள்ளது. இந் நிறுவனத்திற்கு சுரங்க அனுமதி வழங்கியதில முறைகேடு நடைபெற்றுள்ளது என்பது குற்றச்சாட்டு ஆகும். மேலும், முன்னாள் முதல்வரான பினராயி விஜயன் மகள் வீணாவின் நிறுவனத்திற்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை சோதனையை ரத்து செய்யுமாறு கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்த மனுவை கேரளா ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் கேரளா முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடு உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
சோதனையை முடித்துக் கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியே வந்தனர். அப்போது அவர்களின் கார் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
சோதனை குறித்து பினராயி விஜயன் கூறியிருப்பதாவது;
சிலரது நீண்டநாள் ஆசை நிறைவேறி உள்ளது. சோதனையை நீண்ட நாள் எதிர்பார்த்து காத்து இருந்தவர்களுக்கும் இது மனநிறைவு தரும். ராகுல் போன்றோர் எப்போது என் வீட்டில் சோதனை நடைபெறும் என்று காத்திருந்தனர்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராகவும் மத்திய விசாரணை முகமைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. மிரட்டலுருக்கு எல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் பயப்பட மாட்டார்கள். வணிக பரிவர்த்தனையை ஊழலாக சித்தரிக்க முயற்சி நடக்கிறது.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan