பாஜவுக்கு தாவ திரிணமுல் காங்கிரசின் 20 எம்பிக்கள் தயார்; மம்தா அதிர்ச்சி
28 வைகாசி 2026 வியாழன் 11:38 | பார்வைகள் : 155
மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழந்த திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் 20 எம்பிக்கள் பாஜவுக்கு தாவ தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு ஆட்சியை இழந்தது. முதல்முறையாக 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பாஜ ஆட்சியைப் பிடித்துள்ளது. சுவேந்து அதிகாரி முதல்வராக செயல்பட்டு வருகிறார்.
மம்தா செயல்பாட்டில் அதிருப்தியடைந்த 100க்கும் மேற்பட்ட திரிணமுல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் பதவியை ராஜினாமா செய்து அதிர்ச்சி கொடுத்தனர். மேலும், திரிணமுல் எம்எல்ஏக்கள் பாஜ கூட்டத்தில் பங்கேற்றதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த 20 எம்பிக்கள் பாஜவுக்கு தாவ தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பாஜ மூத்த தலைவர் சௌமித்ரா கான் கூறுகையில், '20 திரிணமுல் எம்பிக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். எங்கள் கட்சியின் தலைமை விரும்பினால், அவர்கள் கட்சி மாறத் தயாராக இருக்கிறார்கள். பாஜ நினைத்தால், அடுத்த சில நாட்களில் ஒட்டுமொத்த திரிணமுல் கட்சியையும் காலி செய்து விடும்,' என்றார். இருப்பினும், தங்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படும் எம்பிக்களின் பெயர்களை அவர் வெளிப்படுத்தவில்லை.
இந்தத் தகவலை நிராகரித்துள்ள மூத்த திரிணமுல் எம்பி சவுகதா ராய், இந்தத் தகவல்கள் முற்றிலும் அடிப்படையற்றவை என்று கூறியுள்ளார்.
தற்போது மேற்கு வங்கத்தில் உள்ள மொத்தமுள்ள 42 லோக்சபா தொகுதிகளில், திரிணமுல் காங்கிரசுக்கு 29 எம்பிக்களும், பாஜவுக்கு 12 எம்பிக்களும், காங்கிரசுக்கு ஒரு எம்பியும் உள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan