நடிகர் அர்ஜுன் தாஸுக்கு நிச்சயதார்த்தம் பொண்ணு யார் தெரியுமா?
27 வைகாசி 2026 புதன் 15:37 | பார்வைகள் : 148
அர்ஜுன் தாஸ் என்று சொன்னதுமே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவரின் கம்பீரமான குரல் தான். அதன்காரணமாகவே அவரை வில்லனாக நடிக்க வைத்து அதில் வெற்றியும் கண்டார் லோகேஷ் கனகராஜ். அர்ஜுன் தாஸ் புகழ் வெளிச்சம் பெற்றது லோகி இயக்கிய கைதி படத்தின் மூலம் தான். அப்படத்தில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் பெரியளவில் ரீச் ஆனதால், தன்னுடைய அடுத்த படமான மாஸ்டரிலும் அவரை விஜய்க்கு வில்லனாக நடிக்க வைத்தார் லோகேஷ். அப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்திலும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். குறிப்பாக ரோலெக்ஸ் ஆக சூர்யா வரும் காட்சிகளில் நடித்திருந்ததால் அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. விஜய்க்கு வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸை குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க வைத்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். அந்த கேரக்டரிலும் தூள் கிளப்பி இருந்தார் அர்ஜுன் தாஸ். இவர் வில்லனாக மட்டுமின்றி ஹீரோவாகவும் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அந்த படங்கள் பெரியளவில் ரீச் ஆகவில்லை.
குறிப்பாக இவர் நாயகனாக நடித்த அந்தாகாரம் திரைப்படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. அப்படத்தை அட்லீ தயாரித்திருந்தார். இதுதவிர வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான அநீதி, சாந்தகுமார் இயக்கிய ரசவாதி, விஷால் வெங்கட் இயக்கிய பாம் போன்ற படங்களில் நாயகனாக நடித்திருந்தார். இப்படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் தோல்விப்படங்களாகவே அமைந்தன. தற்போது இவர் கைவசம் லவ் மற்றும் ஒன்ஸ் மோர் ஆகிய திரைப்படங்கள் உள்ளன.
இதில் லவ் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஜோடியாக நடித்துள்ளார் அர்ஜுன் தாஸ். இப்படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர இவர் கைவசம் உள்ள மற்றொரு திரைப்படம் ஒன்ஸ் மோர். இப்படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங்கும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் புட்ட பொம்மா, பவன் கல்யாணின் ஓஜி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், கோலிவுட்டில் ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அது என்னவென்றால், நடிகர் அர்ஜுன் தாஸுக்கு இந்த வாரத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாம். ரகசியமாக நடைபெற உள்ள இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளார்கள். அவர் திருமணம் செய்துகொள்ள உள்ள பெண் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர்.
நடிகர் அர்ஜுன் தாஸ் அண்மையில் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார். அவரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் காதலிப்பதாக பரவலாக பேச்சு அடிபட்டது. ஆனால் அது வெறும் வதந்தி என இருவருமே கூறினர். அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர். அவர்கள் இருவரும் இணைந்து லவ் என்கிற திரைப்படத்தில் நடித்தனர். அதுவே அந்த வதந்திக்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan