Paristamil Navigation Paristamil advert login

ஐபிஎல்லில் வெளியேறிய பின் டி20 பிளாஸ்டில் சரவெடி! நொறுக்கிய இளம் வீரர்

ஐபிஎல்லில் வெளியேறிய பின் டி20 பிளாஸ்டில் சரவெடி! நொறுக்கிய இளம் வீரர்

27 வைகாசி 2026 புதன் 14:10 | பார்வைகள் : 192


ட்ரிஸ்டன் ஸ்டப்ஸின் அதிரடியில் ஹம்ப்ஷிரே அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் எஸ்செக்ஸை வீழ்த்தியது.

எஸ்செக்ஸ் மற்றும் ஹம்ப்ஷிரே அணிகளுக்கு இடையிலான டி20 பிளாஸ்ட் போட்டி கவுண்டி மைதானத்தில் நடந்தது.

முதலில் ஆடிய ஹம்ப்ஷிரே அணியில் வின்ஸ் (8), டோபி (13) இருவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஜோ வெதர்லே 47 ஓட்டங்கள் விளாசினார்.

டாம் ப்ரெஸ்ட் 11 ஓட்டங்களில் வெளியேற, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (Tristan Stubbs) மற்றும் ஹில்டன் கார்ட்ரைட் இருவரும் வலுவான கூட்டணி அமைத்தனர்.

சிக்ஸர்களை பறக்கவிட்ட ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 69 ஓட்டங்கள் (5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்) விளாசினார்.

கார்ட்ரைட் 21 பந்துகளில் 46 ஓட்டங்கள் விளாச, ஹம்ப்ஷிரே அணி 200 ஓட்டங்கள் குவித்தது. பென்னெட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய எஸ்செக்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது. அதிகபட்சமாக லுக் பென்கென்ஸ்டீன் 48 ஓட்டங்களும், சைமன் ஹர்மர் 36 ஓட்டங்களும் எடுத்தனர்.

மிரட்டலாக பந்துவீசிய ஸ்காட் கர்ரி 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை சாய்த்தார். கிரிஸ் வுட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.