“39°C வரை உயரும் வெப்பநிலை” – 13 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!
27 வைகாசி 2026 புதன் 07:30 | பார்வைகள் : 402
நாடு முழுவதும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, இன்று 27ம் திகதி புதன்கிழமை 13 மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' நிற எச்சரிக்கையை Météo-France இன்று அறிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நேற்று மட்டும் பிரான்ஸ் முழுவதும் 400-க்கும் அதிகமான மாதாந்திர வெப்ப சாதனைகள் முறியடிக்கப்பட்டதோடு, சில இடங்களில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் வெப்பநிலை “38°C முதல் 39°C” வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன் தாக்கமாக பல பிராந்தியங்களில் ஓசோன் மாசு அதிகரிக்கும் அபாயமும் உருவாகியுள்ளது. குறிப்பாக கடும் வெப்ப காலநிலையுடன் காற்று மாசு இணைந்ததால், சுவாச நோயாளிகள் மற்றும் முதியவர்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், Préfecture de Police de Paris வெளியிட்ட அறிக்கையில், Île-de-France பிராந்தியத்தில் வாகனப் போக்குவரத்துக்கு பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை காலங்களில் காற்று மாசை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan