ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
20 சித்திரை 2026 திங்கள் 11:35 | பார்வைகள் : 200
ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை 20.04.2026 7.4 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தையடுத்து, இவாடே மாகாணம் மற்றும் ஹொக்கைடோ தீவு பகுதிகளில் அதிகபட்சம் 03 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்பாக, ஹொன்சு கிழக்குக் கடற்கரை அருகிலும் 6.9 ரிச்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் கடற்கரை பகுதிகளில் இருந்து விலகி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan