Paristamil Navigation Paristamil advert login

தேர்தல் நெருக்கத்தில் நேரத்தை வீணாக்கும் விஜய்: பிரசாரத்தை ரத்து செய்து வீட்டில் ஆலோசனை

தேர்தல் நெருக்கத்தில் நேரத்தை வீணாக்கும் விஜய்: பிரசாரத்தை ரத்து செய்து வீட்டில் ஆலோசனை

19 சித்திரை 2026 ஞாயிறு 05:30 | பார்வைகள் : 206


இன்னும் நான்கு நாட்கள் கூட இல்லாத நிலையிலும், பிரசாரத்தில் ஈடுபடாமல், த.வெ.க., தலைவர் விஜய் நேரத்தை வீணாக்கி வருகிறார்.

தமிழக சட்டசபை தேர்தலில், இடைப்பாடியை தவிர, 233 தொகுதிகளில், த.வெ.க., போட்டியிடுகிறது. முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பிரசாரத்துக்கு அனுமதி வாங்குவதும், பின்னர் அதை ரத்து செய்வதுமாக, விஜய் வீட்டுக்குள்ளே இருக்கிறார்.

இதுகுறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது:

தேர்தல் பிரசாரம் ஓய, இன்னும் 100 மணி நேரம் கூட இல்லை. அதனால், ஒவ்வொரு மணி நேரமும் மிக முக்கியம். அதன்படி, 17 மற்றும் 18ம் தேதிகளில் கடலுார், தர்மபுரி மாவட்டங்களில், விஜய் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கப்பட்டது. ஆனால், பிரசாரத்தை விஜய் ரத்து செய்து விட்டார்.

அதேநேரத்தில், தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதி பூத் கமிட் டி பொறுப்பாளர்களுடன், அவர் நேற்று ஆலோசனை நடத்த திட்டமிட்டார். தொகுதியில் உள்ள தேர்தல் பணிமனைக்கு செல்லாமல், 284 பூத் கமிட்டிகளின் பொறுப்பாளர்களையும், பனையூர் அலுவலகத்துக்கு வரவழைத்து,ஆலோ சனை நடத்தி உள்ளார்.

இதனால், பெரம்பூர் பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் ஒருநாள் பிரசாரம் தடைப்பட்டது.

வீட்டில் இருந்தே, பெரம்பூர், திருச்சி கிழக்கில், விஜயால் வெற்றி பெற முடியும். ஆனால், மற்ற வேட்பாளர்க ளின் நிலைமை அப்படியில்லை.

தேர்தல் நெருக்கத்திலாவது, தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டால்தான், பிற வேட்பாளர்களும் வெற்றி பெற முடியும். 
இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.

திருச்சி கிழக்கு தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன், விஜய் இன்று ஆலோசனை நடத்த உள்ளார் என கூறப்படுகிறது. தொடர்ந்து, 21ம் தேதி சென்னை நந்தனத்தில் பொதுக்கூட்டம் நடத்தவும், த.வெ.க., தரப்பில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

பிரசாரத்தை நம்பி த.வெ.க., இல்லை-

விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை:

தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதல்ல. இருந்தும், நாம் உஷாராக இருக்க வேண்டும். தி.மு.க., எனும் திசை திருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களை குழப்பும் முயற்சிகளில் ஈடுபடுகிறது. தமிழக மண்ணில் பாசிச சக்திகள் காலுான்ற முடியாது. காபந்து அரசான கபட நாடக தி.மு.க., அரசு, அதிகாரிகள் சிலரை வைத்து நமக்கும், நம் வேட்பாளர்களுக்கும் பரப்புரை செய்ய நெருக்கடிகளை கொடுக்கிறது. த.வெ.க.,விற்கு ஆதரவாக, ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் சக்தி இயக்கமாக மாறி, பிரசாரம் நடக்கிறது.

த.வெ.க.,வின் வெற்றியைத் தடுத்து விடலாம் என்று, 'தான்' என்ற அகந்தையில் இருக்கும் ஆதாய அரசியல் சூதாடும் அனுபவசாலிகள், மக்கள் ஓர் அமைதிப் புரட்சிக்குத் தயாரானதை மறந்து ஆடுகின்றனர். இந்த ஆட்டமெல்லாம், வரும் 21ம் தேதி வரைதான். 23ம் தேதி அன்றே, ஊழல் சக்திகள் மற்றும் பாசிச சக்திகளும் விசில் புயலில் வீழ்வது உறுதி. வரம்பு இல்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, பொய் வாக்குறுதிகள் தந்து, மக்களை ஏமாற்றும், 'லிமிடெட் கம்பெனி' தி.மு.க.,வை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல், மக் கள் வீட்டுக்கு அனுப்புவது உறுதி. இவ் வாறு அதில் கூறப் பட் டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்