Paristamil Navigation Paristamil advert login

நேட்டோ வான்வெளிக்கருகில் ரஷ்யாவின் போர் விமானங்களைத் தடுத்த பிரெஞ்சு ரஃபேல் போர் விமானங்கள்!!

நேட்டோ வான்வெளிக்கருகில் ரஷ்யாவின் போர் விமானங்களைத் தடுத்த பிரெஞ்சு ரஃபேல் போர் விமானங்கள்!!

17 சித்திரை 2026 வெள்ளி 14:30 | பார்வைகள் : 285


பிரான்சின் ரஃபேல் போர் விமானங்கள், நேட்டோ வான்வெளிக்கருகில் பறந்த ரஷ்ய Su-30SM விமானங்களை தடுக்க பல முறை அவசரமாக புறப்பட்டன. இந்த நடவடிக்கைகள் « enhanced Air Policing » பணியின் கீழ் லிதுவேனியாவின் Šiauliai வான்படை தளத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டன.

ஒரு வாரத்தில் நான்கு Rafale B விமானங்கள் நான்கு முறை பறந்து, லிதுவேனியா, லத்வியா மற்றும் எஸ்டோனியா நாடுகளின் அருகே செயல்பட்ட ஆறு ரஷ்ய ராணுவ விமானங்களை அடையாளம் கண்டு அவற்றை கண்காணித்தன. 

இந்த நடவடிக்கைகளில், ரஷ்ய Il-20M உளவு விமானமும் கவனிக்கப்பட்டது. இது ரேடார் மற்றும் தொடர்பு சிக்னல்களை சேகரிக்கும் திறன் கொண்டதால், நேட்டோவுக்கு முக்கிய கண்காணிப்பு இலக்காகும். மேலும், இது எதிர்-ரேடார் ஏவுகணைகள் கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த பணிகள் நேட்டோவின் பால்டிக் வான்வெளி பாதுகாப்பு முயற்சியின் ஒரு பகுதியாகும். 2004 முதல் நடைபெறும் இந்த நடவடிக்கையில், தற்போது பிரான்ஸ் முன்னிலை வகித்து, நான்கு Rafale B விமானங்களையும் 100-க்கும் மேற்பட்ட ராணுவத்தினரையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்