Paristamil Navigation Paristamil advert login

சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பாயெர்ன் முனிச் மிரட்டல் வெற்றி - ரியல் மாட்ரிட் ரசிகர்கள் அதிர்ச்சி

சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பாயெர்ன் முனிச் மிரட்டல் வெற்றி - ரியல் மாட்ரிட் ரசிகர்கள் அதிர்ச்சி

17 சித்திரை 2026 வெள்ளி 13:51 | பார்வைகள் : 178


UEFA சாம்பியன்ஸ் லீக் காலிறுதி போட்டியில் பாயெர்ன் முனிச் வெற்றி பெற்று, ரியல் மாட்ரிட் அணியை வெளியேற்றியது.

அல்லியன்ஸ் அரேனா மைதானத்தில் நடந்த UEFA சாம்பியன்ஸ் லீக் காலிறுதி போட்டியில், பாயெர்ன் முனிச் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.

முதல் நிமிடத்திலேயே ரியல் மாட்ரிட்டின் ஆர்டா குலர் கோல் அடித்து பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினார்.

ஆனால், அடுத்த 5 நிமிடங்களில் பாயெர்ன் முனிச் வீரர் அலெக்ஸாண்டர் பாவ்லோவிக் கோல் அடித்து அதிர்ச்சி கொடுத்தார்.

பின்னர் ரியல் மாட்ரிட் தரப்பில் குலர் 29வது நிமிடத்தில் கோல் அடிக்க, பாயெர்ன் முனிச் வீரர் ஹாரி கேன் 38வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

அதனைத் தொடர்ந்து, நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே 42வது நிமிடத்தில் கோல் அடிக்க, முதல் பாதியில் ரியல் மாட்ரிட் ஆதிக்கம் செலுத்தியது.

இரண்டாம் பாதியில் இரு அணி வீரர்களும் கடுமையாக போராடியதால் 86வது நிமிடம் வரை கோல் விழவில்லை. ரியல் மாட்ரிட் வீரர் எட்வார்ட்டோ காமவிங்கா சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டது.

இது அந்த அணிக்கு அடியாக விழ, 89வது நிமிடத்தில் லூயிஸ் டயஸ் கோல் அடித்தார். ஆட்டத்தின் 90+4வது நிமிடத்தில் பாயெர்ன் அணியின் மற்றொரு வீரர் மைக்கேல் ஓலிஸ் கோல் அடித்தார்.

இதன்மூலம் பாயெர்ன் முனிச் 4-3 என்ற கோல் கணக்கில் ஆதிக்கம் செலுத்த, கூடுதல் நேரத்தில் கோல் அடிக்க ரியல் மாட்ரிட் போராடியது. என்றாலும் 120வது நிமிடத்தில் இரண்டு கோல்கள் அடித்த ஆர்டா குலர் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார்.

இறுதியில் பாயெர்ன் முனிச் 4-3 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

29ஆம் திகதி நடைபெற உள்ள அரையிறுதி லெக் 1 போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணியை பாயெர்ன் முனிச் எதிர்கொள்ள உள்ளது.    

 

 

எழுத்துரு விளம்பரங்கள்