ரோஹித் இல்லை..மரண அடி வாங்கிய மும்பை இந்தியன்ஸ் - காரணம் கூறிய ஹர்திக் பாண்டியா
17 சித்திரை 2026 வெள்ளி 13:48 | பார்வைகள் : 182
எதிரணியினர் தங்களை முழுமையாக விஞ்சிவிட்டதாக தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.
வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
ரோஹித் ஷர்மா இப்போட்டியில் விளையாடவில்லை. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் குயின்டன் டி காக் சதம் (112 ரன்) விளாசினார்.
நமன் திர் 31 பந்துகளில் 50 ஓட்டங்கள் விளாச, மும்பை இந்தியன்ஸ் 195 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ப்ரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் ருத்ர தாண்டவம் ஆடினர்.
ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) 35 பந்துகளில் 66 ஓட்டங்கள் (4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) விளாசி ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய ப்ரப்சிம்ரன் சிங், ஆட்டமிழக்காமல் 39 பந்துகளில் 2 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் 16.3 ஓவர்களிலேயே 198 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. காஸன்பர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மும்பை இந்தியன்ஸ் தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது.
இதுகுறித்து அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா கூறுகையில், "மிகவும் வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், இத்தருணத்தில் என்னிடம் சொல்வதற்கு அதிகம் எதுவுமில்லை.
நாங்கள் மீண்டும் தொடக்கப் புள்ளிக்குச் சென்று, எங்கு பின்தங்கியிருக்கிறோம் என்பதை நிதானமாக ஆராய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
அது தனிப்பட்ட வீரர்களின் செயலா? ஒரு குழுவாகவா? அல்லது திட்டமிடலிலா? நாம் அதைத் தெளிவாகக் கண்டறிந்து, அடுத்து என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம்.
இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு ஏற்பட்டதால் ஆடுகளம் விளையாடுவதற்கு சற்றுச் சாதகமாக மாறியது; இருப்பினும், உண்மையை சொல்லப்போனால் எதிரணியினர் நம்மை முழுமையாகவே விஞ்சிவிட்டனர்" என்கிறார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan