ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணத் திட்டத்திற்கு பிரெஞ்சு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!!
17 சித்திரை 2026 வெள்ளி 07:45 | பார்வைகள் : 2963
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் செல்ல கட்டணம் விதிக்கும் யோசனைக்கு பிரெஞ்சு அரசாங்கம் திடமான எதிர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அரசு பேச்சாளர் Maud Bregeon, "இத்தகைய கட்டண முறை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று வலியுறுத்தினார்.
இதே விவகாரம் குறித்து முன்பே கருத்து தெரிவித்த பொருளாதார அமைச்சர் Roland Lescure கூறிய பதில் சில குழப்பங்களை ஏற்படுத்தியது. அவர், சர்வதேச கடல்சார் சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், ஹோர்முஸ் நீரிணை ஒரு சர்வதேச பாதை என்பதால் அது அனைவருக்கும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மாட் பிரெஜியோன் விளக்கம் அளித்து, “பிரான்ஸ் ஏற்கனவே நிலைமையின் விளைவுகளை சந்தித்து வருகிறது. ஆனால், இந்த நீரிணையில் கடந்து செல்ல கட்டணம் செலுத்துவது சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்பதால், அதற்கு எங்களின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை” என்று தெளிவுபடுத்தினார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணையில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து விரைவாகவும் அமைதியான முறையிலும் மீண்டும் நிலைநிறுத்தப்படுவது முக்கியம் என அவர் தெரிவித்தார்.
இதே நேரத்தில், சில கப்பல்களுக்கு ஈரான் ஏற்கனவே இதற்குச் சமமான கட்டண முறையை செயல்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை, உலக சந்தையின் சுதந்திரத்திற்காக இந்த நீரிணையில் தடையற்ற போக்குவரத்து மிகவும் அவசியம் என TotalEnergies நிறுவனத் தலைவர் Patrick Pouyanné குறிப்பிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire