Paristamil Navigation Paristamil advert login

கல்பாக்கம் அதிவேக ஈனுலை நாட்டின் பெருமைமிகு சாதனை: சி.பி.ராதாகிருஷ்ணன்

கல்பாக்கம் அதிவேக ஈனுலை நாட்டின் பெருமைமிகு சாதனை: சி.பி.ராதாகிருஷ்ணன்

18 சித்திரை 2026 சனி 07:30 | பார்வைகள் : 219


கல்பாக்கம் அணு உலையில் அமைக்கப்பட்ட, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, மாதிரி அதிவேக ஈனுலை சமீபத்தில் வினைபுரிய தொடங்கியது, நம் நாட்டு விஞ்ஞானிகளின் 20 ஆண்டு கால முயற்சியால் நிகழ்ந்த பெருமைமிகு சாதனை,” என, ராஜ்யசபா தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.

சென்னையை அடுத்துள்ள கல்பாக்கத்தில், 500 மெகாவாட் திறன் உடைய மாதிரி அதிவேக ஈனுலை ஏப்., 6ம் தேதி இரவு,கிரிடிக்காலிட்டி எனப்படும், வினை புரியும் செயலை தொடங்கியது. இது முழுக்க, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அதிவேக ஈனுலை.

இந்த சாதனையை ராஜ்ய சபா தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று சபையில் பாராட்டினார். இதுகுறித்து அவர் பேசியதாவது:

கல்பாக்கத்தில், மாதிரி அதிவேக ஈனுலை இயங்க தொடங்கியது, நாடே பெருமைகொள்ளக்கூடிய சாதனை. ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அணுசக்தி துறையின் பல பிரிவுகள் இணைந்து செய்த முயற்சியின் விளைவு இது.

இதன் மூலம், நாட்டின் மூன்று கட்ட அணுசக்தி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு நாடு முன்னேறியுள்ளது. சாதாரண அணு உலைகளை வி ட, இந்த வகை அணு உலை அதிக எரிபொருள் உருவாக்கும் தனிச்சிறப்பை கொண்டது.

இச்சாதனையால், மேம்பட்ட அணு தொழில்நுட்பம் கொண்ட நாடுகளின் வரிசையில் நாமும் இடம்பிடித்துள்ளோம். இதில் பங்காற்றிய விஞ்ஞானிகள், பொறியாளர்கள் உட்பட அனைவருக்கும் ராஜ்யசபா சார்பில் பாராட்டுகள்.

இவ்வாறு அவர் பேசினார். 

எழுத்துரு விளம்பரங்கள்