Paristamil Navigation Paristamil advert login

அடிப்படை சுகாதாரப் பொருட்களை வாங்க முடியாமல் தவிப்பு!! கேள்விக்குறியாகும் எதிர்காலம்!!

அடிப்படை சுகாதாரப் பொருட்களை வாங்க முடியாமல் தவிப்பு!! கேள்விக்குறியாகும் எதிர்காலம்!!

16 சித்திரை 2026 வியாழன் 20:54 | பார்வைகள் : 422


 பிரான்சில் 4 மில்லியன் மக்கள்,குளியல் ஜெல், பற்பசை, வாசனைத் திரவியம் (déodorant), மாதவிடாய் பாதுகாப்பு பொருட்கள் போன்ற அடிப்படை சுகாதாரப் பொருட்களை கூட வாங்க முடியாமல் விட்டுவிடுகிறார்கள் என்று Ifop நிறுவனம் Dons Solidaires அமைப்புக்காக நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

இது பிரான்சில் வறுமை மற்றும் சுகாதாரப் புறக்கணிப்பு அதிகரித்து வருவதை தெளிவாக காட்டுகிறது.

10 பெண்களில் 1 பெண்,மாதவிடாய் பாதுகாப்பு பொருட்களை வாங்க முடியாமல் மாற்று வழிகளை பயன்படுத்துகிறார்.

Montreuil பகுதியில் வசிக்கும் 48 வயது தாய் ஒருவர் கூறியது:
“என் மகளுக்கு மாதவிடாய் வந்தபோது, நான் serviette வாங்க முடியவில்லை பழைய T‑shirt ஒன்றை கிழித்து பயன்படுத்தச் சொன்னேன்.”

தனியே உள்ள  தாய்மார்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்

தனியே உள்ள  ஒற்றைத் தாய்மார்கள் 60%, நிதிநிலைமை காரணமாக சுகாதாரப் பொருட்களை வாங்குவதை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

மொத்த பிரெஞ்சு மக்களில் இது 43% ஆகும்

2025 இல், ஒரு தாய், குழந்தைகளின் இரவு Couche களை மீண்டும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக Dons Solidaires-க்கு தெரிவித்தார்.

வேலை செய்பவர்களும் வறுமையில்  (travailleurs pauvres) Ifop ஆய்வு காட்டுவது:

வறுமையில் உள்ள வேலை செய்பவர்கள் மிக அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

இவர்களில் 50% செலவுகளால் மனஅழுத்தத்தில் இருக்கிறார்கள்.

42% பேர் உணவு வாங்கலாமா, சுகாதாரப் பொருட்கள் வாங்கலாமா என்று தேர்வு செய்ய வேண்டிய நிலை.

இது தேசிய சராசரியை விட 26 புள்ளிகள் அதிகம்.

சுகாதாரப் பொருட்கள் இல்லாததால் மக்கள் எப்படித் தங்களைத் தற்காத்துக்கொள்கிறார்கள்?

33% பேர் சலவைப் பொடி (lessive) பயன்படுத்துவதை குறைத்துள்ளனர்

24% பேர் உட்பாவாடை/உட்பருத்தி அடிக்கடி மாற்றுவது குறைந்துள்ளது

20% பேர் காகிதம் வாங்க முடியாமல் பொது கழிப்பறைகளை பயன்படுத்துகின்றனர்.

சமூக வாழ்க்கையில் தாக்கம் — தனிமை, அவமானம், நம்பிக்கை இழப்பு

46% பேர் தங்களின் மீது நம்பிக்கை இழக்கிறார்கள்

33% பேர் வீட்டிலேயே தங்கிவிடுகிறார்கள், வெளியே செல்லத் தயங்குகிறார்கள்.

தங்களை சுத்தமாக இல்லை என்று நினைக்கும் மக்கள் வெளியே செல்லவே பயப்படுகிறார்கள்.

என மேற்பட்ட கணிப்பீடு தெரிவித்திருப்பது பிரான்சின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் ஆபத்தை உணர்த்துகின்றது!

எழுத்துரு விளம்பரங்கள்