2025 இல் பிரான்சில் பாலியல்,பாலின அவமதிப்புகள் அதிகரிப்பு!!
16 சித்திரை 2026 வியாழன் 15:52 | பார்வைகள் : 358
பிரான்சில் 2025 ஆம் ஆண்டில் பாலியல் மற்றும் பாலின அவமதிப்புகள் (outrages sexistes et sexuels) 17% அதிகரித்துள்ளன என உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2025 இல் மொத்தம் 3,900 குற்றச்செயல்கள் காவல்துறை மற்றும் ஜோந்தாமெரி மூலம் மூலம் பதிவு செய்யப்பட்டன.
இதில் 26% சம்பவங்கள் கடுமையான சூழ்நிலைகளால் குற்றம் ( délit) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
எங்கு அதிகம்? யார் பாதிக்கப்படுகிறார்கள்?
பெரிய நகரங்களில் மிக அதிகம்:
100,000 பேருக்கு 6.4 சம்பவங்கள்
பாரிஸ் பெருநகரப் பகுதியில்100,000 பேருக்கு 8.5 சம்பவங்கள்(நாட்டில் மிக உயர்ந்த விகிதம்)
தேசிய காவல்துறை தரவுகளின்படி:
10 இல் 9 சம்பவங்கள் பெண்களை குறிவைக்கின்றன.
குற்றவாளிகளில் 97% ஆண்கள்.
14% சம்பவங்கள் பொதுப் போக்குவரத்தில் நடந்தவை.
சட்டம் என்ன சொல்கிறது?
3 ஆகஸ்ட் 2018 சட்டம் படி:
பாலியல்,பாலின அவமதிப்புகள் (Outrage sexiste ou sexuel) என்பது
ஒருவரின் கண்ணியத்தை குலைக்கும்,
அல்லது அவரை பயமுறுத்தும், அவமானப்படுத்தும், விரோதமான சூழ்நிலைக்கு ஆளாக்கும்
பாலின/பாலியல் சார்ந்த கருத்து அல்லது நடத்தை.
1 ஏப்ரல் 2023 முதல்:
கடுமையான பாலியல்,பாலின அவமதிப்புகள் குற்றம் ஆக கருதப்படுகிறது
தண்டனை: 3,750 € அபராதம்
கூடுதல் தண்டனைகள்:
குடியுரிமை பயிற்சி (stage de citoyenneté)






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan