Paristamil Navigation Paristamil advert login

வனப்பகுதி நடைப்பயிற்சியில் நாய்கள் பட்டியால் கட்டிய படியே செல்லவேண்டும்!

வனப்பகுதி நடைப்பயிற்சியில் நாய்கள் பட்டியால் கட்டிய படியே செல்லவேண்டும்!

16 சித்திரை 2026 வியாழன் 15:35 | பார்வைகள் : 2267


ஒவ்வொரு ஆண்டும் போல, ஏப்ரல் 15 முதல் ஜூன் 30 வரை, வனப்பகுதி பகுதிகளில் /பாதை அல்லாத இடங்களில் நாய்களை கயிற்றில் பிடித்தே நடக்க வேண்டும் என்பது பிரான்சின் கட்டாய விதி.

இந்தக் காலம்:

மிருகங்கள் குட்டி பெறும் காலம்,

பறவைகள் கூடு அமைக்கும் காலம்,

எனவே காட்டு உயிரினங்களைப் பாதுகாப்பது முக்கியம்.


ஆண்டு முழுவதும் உள்ள பொதுவிதி

காட்டுப்பகுதிகளில் நாய்கள் உங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

அவை உங்களிடம் இருந்து 100 மீட்டருக்கு மேல் செல்லக்கூடாது.

ஏப்ரல் – 30 ஜூன் : கடுமையான விதி

 

இந்த காலத்தில்:

வனப் பாதை/ சாலை/பாதை அல்லாத இடங்களில் நாய்களை கட்டாயம் கயிற்றில் பிடிக்க வேண்டும்.

வனப் பாதை (allée forestière) எனக் கருதப்படுவது:

சாலைகள்

நடைபாதைகள்

காட்டு நடைபாதைகள்

ஏன் இந்த விதி?

நாய்கள் பறவைகள், குட்டி மிருகங்கள் போன்றவற்றை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

அவற்றின் இருப்பு கூட காட்டு உயிரினங்களை பயமுறுத்தி, மனஅழுத்தம் ஏற்படுத்தும்.

இது குட்டி மிருகங்களின் உயிர் பாதுகாப்பையும் இனப்பெருக்கத்தையும் ஆபத்துக்கு உள்ளாக்கும்.

விதியை மீறினால்?
135 € அபராதம் விதிக்கப்படும்.


காட்டில் செய்யக்கூடாதவை


காட்டு மிருகங்களுக்கு உணவு கொடுக்கக்கூடாது.

அவற்றை தொடுதலோ அல்லது அருகில் செல்வதோ கூடாது.

மனிதரின் மணம் படும்போது,
குட்டிகளை தாய்மிருகம் கைவிடும் அபாயம் உள்ளது.