500 மேயர்களை சந்திக்கும் ஜனாதிபதி மக்ரோன் – பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விவாதம்!!
16 சித்திரை 2026 வியாழன் 07:45 | பார்வைகள் : 1982
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று ஏப்ரல் 16ம் திகதி பிற்பகலில் எலிசே மாளிகையில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 400 முதல் 500 வரையான மேயர்களை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பிற்காக தேர்வு செய்யப்பட்ட உள்ளூராட்சி பிரதிநிதிகள், பிரதேச ஆளுநர்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்டவர்கள் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பில் பங்கேற்கும் மேயர்கள் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். புதியவர்களும் அனுபவமிக்கவர்களும் சமநிலையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக La France Insoumise மற்றும் Rassemblement National கட்சிகளின் மேயர்களும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முக்கிய சந்திப்பில் நான்கு பிரதான தலைப்புகள் விவாதிக்கப்பட உள்ளன. அவை பாதுகாப்பு, அரசுடன் உள்ள தொடர்புகள், பொது சேவைகள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவையாகும். உள்ளூராட்சி நிர்வாகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நேரடியாக கருத்து பரிமாற்றம் நடத்துவது இதன் நோக்கமாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் மூலம் மேயர்களின் பணியை பாராட்டுவதோடு, அவர்களுக்கு எதிராக உருவாகும் சவால்கள் குறித்து எச்சரிக்கவும், மேலும் அவர்களை ஊக்குவித்து ஆதரிக்கவும் ஜனாதிபதி முனைவதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி தலைவர்கள் தற்போது பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி வருவதால், அவர்களுக்கு அரசின் முழு ஆதரவு இருப்பதை வலியுறுத்துவது இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan