மே1 - வேலைச்சட்டத்தில் அரசுக்கு பின்னடைவு!
15 சித்திரை 2026 புதன் 20:38 | பார்வைகள் : 3337
மே1 வேலை அனுமதி சட்டம் தொடர்பான சர்ச்சையால் தொடங்கியது.
பிரதமர் செபஸ்தியோன் லுகோர்னூ (Sébastien Lecornu) இந்தச் சட்டத்தை முன்னேற்ற வேண்டிய கூட்டுக் குழு (commission mixte paritaire) கூட்டத்தை நடத்தாமல்,
சட்டத்தை பின்னுக்கு தள்ளும் முடிவை எடுத்தார்.
இந்த முடிவு, அரசை அரசியல் அழுத்தத்தின் மையத்தில் நிறுத்தியது.
Renaissance கட்சியின் அதிருப்தி. Renaissance கட்சித் தலைவர் கப்ரியல் அத்தால் (Gabriel Attal) இந்தச் சட்டத்தை வலுவாக ஆதரித்தவர்,
இந்த முடிவினால் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பல அரசியல் குழுக்கள் பிரதமர் இடதுசாரி கட்சிகளின் அழுத்தத்துக்கு முன் தளர்ந்து விட்டார் என்று குற்றம் சாட்டுகின்றன.
ஆரம்பத்தில் அரசு பாராளுமன்ற அதிகாரத்தின் மூலம் சட்டத்தை முன்னேற்ற முயன்றது. ஆனால் இடதுசாரிகள்பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதாக எச்சரித்ததமையால், அரசு பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
வலதுசாரி மற்றும் RN கட்சிகள் மற்றும் புரூனோ ரத்தெயோ (Bruno Retailleau) இதை “மீண்டும் மீண்டும் சரணடைதல்” எனக் கூறி விமர்சித்துள்ளனர்.
Rassemblement national தலைவர் ஜோர்தான் பார்தெல்லா (Jordan Bardella) இன்னும் கடுமையாகப் பேசி, “உண்மையான பிரதமர் Olivier Faure தான்” என்று கூறினார் அதாவது, இடதுசாரி அழுத்தமே அரசை இயக்குகிறது என்று தெரிவித்து விமர்சித்து உள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan