Paristamil Navigation Paristamil advert login

குறைந்த உமிழ்வு மண்டலங்கள் (ZFE) இரத்து

குறைந்த உமிழ்வு மண்டலங்கள் (ZFE) இரத்து

15 சித்திரை 2026 புதன் 20:13 | பார்வைகள் : 395


பிரான்ஸ் பாராளுமன்றம், «இலகுவாக்கப்பட்டபொருளாதார வாழ்க்கை» (simplification de la vie économique) என்ற சட்டத்தை இறுதியாக ஏற்றுக்கொண்டது.

இந்தச் சட்டத்தின் முக்கிய விளைவுகளில் ஒன்றாக குறைந்த உமிழ்வு மண்டலங்ககளான ZFE (Zones à faibles émissions ) இரத்து செய்யப்படுகின்றன.

குறைந்த உமிழ்வு மண்டலங்ககளான ZFE என்றால் என்ன? ஏன் இரத்து?

ZFE-கள் 2019 இல் தொடங்கப்பட்டு, 2021 இல் விரிவுபடுத்தப்பட்டன.

பழைய, அதிக மாசு உமிழும் மகிழுந்துகளை நகர மையங்களில் இருந்து கட்டுப்படுத்தி, நுண் தூசி மாசை குறைப்பது. ஆனால் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு இது அநியாயமானது என்று கருதினர்.

அதனால், Républicains மற்றும் Rassemblement national கட்சிகளின் முன்முயற்சியால்,
ZFE-களை இரத்து செய்யும் திருத்தம் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

சட்டம் இப்போது அரசியலமைப்பு மன்றத்தின் (Conseil constitutionnel) பரிசீலனைக்கு செல்லும்.

சில நாடாளுமன்றக் குழுக்கள், ZFE இரத்துச் செய்யும் பிரிவை நீதிமன்றம் தடை செய்யும் என நம்புகின்றன.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின்(PME ) அமைச்சர் Serge Papin

«இது பிரெஞ்சு மக்களிற்கான நேரம், சுதந்திரம், தொழில் முனைவு ஆகியவற்றை மீண்டும் வழங்கும் ஒரு “முதல் கட்டம்”. ஆனால் சட்டத்தின் பயணம் “நீண்ட ஓட்டம்” போல கடினமானது»

என்றும் ஒப்புக்கொண்டார்.

அரசு கடைசி நிமிடத்தில் சமரசத் திருத்தம் ஒன்றை முன்வைத்தது,ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.
 

எழுத்துரு விளம்பரங்கள்