விரைவில் வெளியாகும் ஜனநாயகன்!
15 சித்திரை 2026 புதன் 16:32 | பார்வைகள் : 1301
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து விட்டநிலையில் அவர் நடித்த ஜனநாயகன் திரைப்படம் அவரின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. ஜனநாயகன் எனது கடைசி திரைப்படம் என விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார். ஆனால் அப்படி அறிவித்த அவரின் ஜனநாயகன். தற்போது வரை தியேட்டரில் வெளியாகவில்லை. கடந்த ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை..
ஆனால் அப்படி அறிவித்த அவரின் ஜனநாயகன். தற்போது வரை தியேட்டரில் வெளியாகவில்லை. கடந்த ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. தற்போது படம் மறுத்தணிக்கையில் இருக்கிறது.. ஆனால் எப்போது தணிக்கை அதிகாரிகள் சான்றிதழ் கொடுப்பார்கள் என்பது தெரியவில்லை.. படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் இருப்பதால் தேர்தல் அதிகாரிகள் படத்தை பார்க்க வேண்டும் என அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஒருபக்கம் சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் கசிந்தது.. சில இணையதளங்களில் படம் முழுவதுமாக வெளியானது. பலரும் டவுன்லோட் செய்து இந்த படத்தை பார்த்துவிட்டனர். இது தயாரிப்பாளருக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது..
இந்நிலையில்தான், படத்தை விரைவாக தியேட்டரில் வெளியிடும் முயற்சியில் படத்தின் தயாரிப்பாளர் இறங்கியிருக்கிறார்.. நேற்று விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது.. அப்போது படத்தை தியேட்டரில் வெளியிட நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம் என விநியோகஸ்தர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து இன்று ஓடிடி நிறுவனத்திடம் தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.. அதிலும் உடன்பாடு ஏற்பட்டால் வருகிற 24 அல்லது 25ஆம் தேதி ஜனநாயகன் தியேட்டரில் வெளியாகும் என்கிறார்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan