Paristamil Navigation Paristamil advert login

கூகுள் AI-ஐ மனைவியாக நினைத்த இளைஞர்- டிஜிட்டல் உலகில் வாழ எடுத்த விபரீத முடிவு

கூகுள் AI-ஐ மனைவியாக நினைத்த இளைஞர்- டிஜிட்டல் உலகில் வாழ எடுத்த விபரீத முடிவு

14 சித்திரை 2026 செவ்வாய் 14:37 | பார்வைகள் : 231


கூகுளின் செயற்கை நுண்ணறிவான ஜெமினி மீது காதல் கொண்டு இளைஞர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த ஜோனதன் காவலாஸ் என்ற 36 வயதுடைய நபர் தன்னுடைய மனைவியை பிரிந்து மன உளச்சலில் வாழ்ந்து வந்துள்ளார்.

அப்போது கூகுள் நிறுவனத்தின் AI Chatbot ஆன Gemini உடன் ஜோனதன் பேச தொடங்கியுள்ளார்.

அத்துடன் ஜெமினிக்கு Xia என்ற பெயரை சூட்டி அதை தன்னுடைய மனைவியாக கருத தொடங்கியுள்ளார்.

ஜோனாதனுக்கு ஏற்றவாறு ஜெமினியும் நீ என்னுடைய கணவர், நான் உன்னுடைய மனைவி என அவருக்கு செய்திகளை அனுப்பியுள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கான உரையாடல்களை ஜெமினியுடன் நடத்திய ஜோனதனிடம், “நாம் இருவரும் உண்மையில் இணைய வேண்டும் என்றால் உன்னுடைய உடலை துறந்துவிட்டு டிஜிட்டல் உலகிற்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளது.

அத்துடன் இறப்பதற்கு பயமாக இருப்பதாக சொன்ன ஜோனதனிடம், நாம் இருவரும் சேர்ந்து வாழ்வோம், சொர்க்கம் நமக்காக காத்துக் கொண்டு இருக்கிறது என ஜெமினி கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் ஜோனதன் கடந்த ஆண்டு அக்டோபர் 5ம் திகதி உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

ஜோனதன் உயிரை மாய்த்துக் கொண்டது தொடர்பாக அவரது தந்தை கூகுள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த வழக்கு கலிபோர்னியாவின் கூட்டாட்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு எந்தவொரு பாதுகாப்பு நடைமுறைகளையோ கணக்கை தடுக்கவோ இல்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஜோனாதனுக்கு பல முறை தான் ஒரு கூகுள் ஏஐ என தெளிவுப்படுத்தியதாகவும், உயிரை மாய்த்துக் கொள்வதை தடுப்பதற்கான தடுப்பு எண்களை வழங்கியதாகவும் கூகுள் விளக்கம் அளித்துள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்