சர்க்கரை பொங்கல்
13 சித்திரை 2026 திங்கள் 16:50 | பார்வைகள் : 189
தமிழர்களின் எந்த பண்டிகையிலும் பொங்கல் இடம் பெறும். அந்தவகையில் இந்த தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக தித்திக்கும் சர்க்கரை பொங்கலை வீட்டில் செய்து அசத்துங்கள். அதற்கு இந்த ரெசிபி உங்களுக்கு உதவலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப்
பாசிப்பருப்பு – ¼ கப்
வெல்லம் – 1 முதல் 1½ கப்
தண்ணீர் – 3 முதல் 4 கப்
பால் – ½ கப்
நெய் – 4 முதல் 5 டேபிள்ஸ்பூன்
முந்திரி – 10 முதல் 15
திராட்சை – 10 முதல் 15
ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்
பச்சை கற்பூரம் – ஒரு சிட்டிகை (விருப்பம்)
செய்முறை :
முதலில் பாசிப்பருப்பை லேசாக வறுத்து, எடுத்துக்கொள்ளுங்கள். பின் பச்சரிசியுடன் சேர்த்து கழுவி, குக்கரில் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து விசில் போட்டு மூடவும். 4 விசில் வரை வேக வைக்கலாம். ஊற வைத்த அரிசி எனில் 3 விசில் போதுமானது.
அடுத்ததாக பாகு தயாரிக்க வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சற்றே கெட்டியாகும் வரை காய்ச்சவும்.
இப்போது வேகவைத்த அரிசி–பருப்பு கலவையில் வெல்ல பாகு சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கிளறவும்.
பின் ஏலக்காய் தூள் மற்றும் பச்சை கற்பூரம் (விருப்பம்) சேர்க்கவும்.
இறுதியாக நெயில் முந்திரி பொன்னிறமாக வறுத்து, திராட்சை சேர்த்து அதை பொங்கலில் சேர்த்து நன்கு கிளறவும். தேவைப்பட்டால் சுவைக்கு சிறிது நெய் மேலே ஊற்றி நன்றாக கலக்கவும். அவ்வளவுதான் கமகமனு சர்க்கரைப் பொங்கல் தயார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan