விஜய் எடுத்த முடிவால் - ஆடி போன ரசிகர்கள்!
13 சித்திரை 2026 திங்கள் 16:37 | பார்வைகள் : 1482
தளபதி விஜய், அரசியல் களத்தில் கால் பதித்ததில் இருந்தே, தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் அவரைச் சுற்றி வலம்வந்து கொண்டிருக்கின்றன . அவை அனைத்துமே திரை உலகத்திலும், அரசியல் அரங்கிலும் அதிக கவனம் பெற்றுள்ளது. தற்போது ‘ஜனநாயகன்’ திரைப்படம் லீக்கானதை தொடர்ந்து தளபதி எடுத்துள்ள முடிவு பேசு பொருளாக மாறியுள்ளது.
எச் வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி மாதத்திலேயே ரிலீஸ் செய்யதிட்டமிடப்பட்டது. ஆனால், சென்சார் அனுமதி கிடைக்காததால் வெளியீடு பலமுறை தள்ளிப்போனது . இதுகுறித்து திரைத்துறை வட்டாரங்களும், அரசியல் விமர்சகர்களும் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வந்தனர். ஒரு வழியாக, தேர்தல் முடிந்ததும் மே மாதத்தில் படம் வெளியாகும் என கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில், தான் 'ஜனநாயகன்' திரைப்படம், திடீரென இணையத்தில் கசிந்ததாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்பே படம் வெளியானது ஒட்டு மொத்த ரசிகர்களையும், திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து வழக்கு பதிவு போலீசார், இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர்.
ஜனநாயகன் திரைப்படம் திருட்டுத்தனமாக வெளியானதால், தயாரிப்பு நிறுவனத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக திரையரங்கு மற்றும் டிஜிட்டல் வருமானத்தில் தாக்கம் இருக்கும் என கணிக்கப்படுகிறது.
இந்த பிரச்சனையால் தயாரிப்பாளருக்கு பாதிப்பு ஏற்படாதபடி, பார்த்துக்கொள்வதாக விஜய் உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அதற்காக அதே நிறுவனத்துடன் புதிய படம் ஒன்றில் நடிக்க அவர் முன்வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆட்டம் போட வைத்துள்ளது.
விஜய் தன்னுடைய அடுத்த படத்தை நடித்தால், அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் , அட்லீ, அல்லது நெல்சன் திலீப்குமார் ஆகியோரில் ஒருவர் இயக்கினால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் போதே தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்த தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாதவை என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘ஜனநாயகன்’ படத்தின் லீக் விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் காத்து வரும் விஜய், அடுத்து வெளியீடு குறித்து என்ன சொல்லுவார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan