94 வயது மூதாட்டிக்கு ஜனாதிபதி மாளிகையின் பதில்!!
12 சித்திரை 2026 ஞாயிறு 22:37 | பார்வைகள் : 3290
Isère பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசிக்கும் 94 வயதான Renée Quagebeur,
தனது வாழ்நாள் கனவாக பிரான்ஸ் குடியரசுத் தலைவர் எமானுவல் மக்ரோனினை சந்திக்க வேண்டும் கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கனவு நிஜமாக முடியாவிட்டாலும், ஜனாதிபதி மாளிகை(Élysée) அரண்மனையிலிருந்து நேரடி பதில் வந்தது.
முதியோர் இல்லத்தில், குடியிருப்பவர்கள் தங்கள் ஆசைகளை எழுதிப் போட ஒரு சிறப்பு அஞ்சல் பெட்டி வைக்கப்பட்டது.
Renée, நம்பிக்கையில்லாமல் இருந்தாலும்,
“என் வயதில் கனவுகள் இல்லை… இருந்தால், குடியரசுத் தலைவரைச் சந்திப்பதே” என்று எழுதி போட்டார்.
இதைக் கண்ட பணியாளர்கள் இருவர், Renée-வின் சார்பில் ஜனாதிபதி மாளிகை Élysée-க்கு கடிதம் எழுதினர்.
சில வாரங்களுக்குப் பிறகு:
Élysée-யிலிருந்து ஒரு உறை வந்தது.
அதில்:
குடியரசுத் தலைவரின் கடிதம்
மேலும் எமானுவல் மக்ரோனின் கையொப்பத்துடன் கூடிய அதிகாரப்பூர்வ உருவப்படம்
→ «Pour Renée, avec mon respect et mon affection, Emmanuel Macron.» என்ற தகவலுடன் வந்தது.
Renée இதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
எமானுவல் மக்ரோனின் உருவப்படம் இப்போது Renée-வின் வீட்டில் முக்கிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Élysée அனுப்பிய உறை, Renée பிறந்த ஊரான Auxi-le-Château பற்றிய ஓவியத்தின் கீழ் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அந்த ஊர் அவருக்கு மிகுந்த பாசமானது.
“என் கிராமத்தின் பழைய ஆவணங்கள் பற்றி அவருடன் சில வார்த்தைகள் பேச விரும்பினேன்…
ஒருநாள் அவற்றைப் பார்க்க அவருடன் சேர்ந்து செல்ல முடியுமா என்று நினைத்தேன்.” என Renée தெரிவித்துள்ளார்.
அவரின் கனவு முழுமையாக நிறைவேறவில்லை என்றாலும், Élysée-யின் இந்த அன்பான பதில் அவருக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி அளித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan