இரட்டை பெண் கொலை, கொலையாளி கைது!!
12 சித்திரை 2026 ஞாயிறு 20:50 | பார்வைகள் : 2389
பிரான்சின் Vienne மாகாணத்தில் உள்ள Montmorillon பகுதியில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரண்டு பெண்கள் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்
சந்தேக நபராக 60 வயதான ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் மார்பில் துப்பாக்கி காயத்துடன் இருந்ததால், Poitiers பல்கலைக்கழக மருத்துவமனைக்கு உலங்குவானூர்தியில் கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கொல்லப்பட்ட இரண்டு பெண்களும் சந்தேக நபரின் முன்னாள் துணை மற்றும்
அவரது சகோதரிகள் ஆவர்.
அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டதால் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.இரண்டு பெண்களின் உடல்கள் வீட்டின் வெளியே கண்டெடுக்கப்பட்டன.
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் வாகனத்தின் அருகில் உள்ள பாதையிலும், மற்றொருவர் வீட்டின் நுழைவாயிலின் முன்னும் கண்டெடுகப்பட்டனர்.
சந்தேக நபர் வீட்டின் முன் மார்பில் துப்பாக்கிக் காயத்துடன் இரத்தத்தில் மூழ்கிய நிலையில், கையில் ஆயுதத்துடன் காணப்பட்டார்.
சந்தேக நபரை கைது செய்ய சுமார் 100 காவல்துறையினரும், GIGN மற்றும் சிறப்புசிறப்பு அதிரடிப்படை பிரிவுகளும் சேர்ந்து,பெரிய அளவில் நடவடிக்கை மேற்கொண்டனர். தேடுதல் நடவடிக்கையில் த்ரோனும் பயன்படுத்தப்பட்டது.
2024 ஆம் ஆண்டில், 107 பெண்கள் தங்கள் துணை அல்லது முன்னாள் துணையால் கொல்லப்பட்டுள்ளனர். 2023 இல் இந்த எண்ணிக்கை 96 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan