Paristamil Navigation Paristamil advert login

IPL ஒரு சினிமா- PSL தான் உண்மையான கிரிக்கெட் - தென் ஆப்பிரிக்கா வீரர் கருத்து

IPL ஒரு சினிமா- PSL தான் உண்மையான கிரிக்கெட் - தென் ஆப்பிரிக்கா வீரர் கருத்து

12 சித்திரை 2026 ஞாயிறு 14:18 | பார்வைகள் : 170


IPL ஒரு சினிமா போன்றது, PSL தான் உண்மையான கிரிக்கெட் என தென் ஆப்பிரிக்கா வீரர் ரோசோ தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு பிசிசிஐயால் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர், உலகளவில் பாரிய ஆதரவுடன் தற்போது 19வது தொடரை எட்டியுள்ளது.

உலகின் பல முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதோடு, உலகளவில் அதிக வருமானம் ஈட்டும் T20 கிரிக்கெட் லீக்காக ஐபிஎல் தொடர் உள்ளது.

ஐபிஎல் தொடருக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் T20 கிரிக்கெட் லீக்கை நடத்தி வருகின்றன.

2016 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் PSL தொடரை நடத்தி வருகிறது.

ஆனால், ஐபிஎல் ஒரு சினிமா போன்றது, PSL தான் உண்மையான கிரிக்கெட் என தென் ஆப்பிரிக்க வீரர் ரிலே ரோசோ(Rilee Rossouw) தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரோசோ, " பாலிவுட் ஈடுபாடு காரணமாக ஐபிஎல் நீண்டதாகவும், அதிக பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக, ஒரு உண்மையான கிரிக்கெட்டை போல் இல்லாமல் ஒரு சினிமா போல் உள்ளது.

ஆனால் PSL தொடர் மிகவும் குறுகிய காலத்தில் விறுவிறுப்பு தன்மையுடன் உள்ளதோடு, இதில் அதிக போட்டித்தன்மை உள்ளது" என தெரிவித்துள்ளார்.

2017 முதலில் PSL தொடரில் விளையாடி வரும் ரிலே ரோசோ, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

முன்னதாக ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

உலக தரம் வாய்ந்த IPL தொடரை PSL தொடருடன் ஒப்பிடுவதா என ஐபிஎல் ரசிகர்கள் ரோசோவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  

 

 

 

எழுத்துரு விளம்பரங்கள்